சச்சின்-சாதனைகளின் நாயகன்

Sachin Tendulkar world cup-2011
World Cup 2011..100 crore peoples 28 years Dream

சச்சின்- கிரிகெட் உலகின் முடிசூடா மன்னன்,
சச்சின்- ரன் மெஷின்,
சச்சின் -கிரிகெட் கடவுள்,
சச்சின் -ஒரு சகாப்தம்,
சச்சின் -சாதனைகளின் செல்லப் பிள்ளை,
சச்சின்..சச்சின்...சச்சின்... இன்னும் கூறிக்கொண்டே போகலாம்.ஒரு சகாப்தத்தை பற்றி கூற என்னால் முடியாது காரணம், சச்சினின் விளையாடிய ஆண்டுகள் தான் என் வயது.
sachin first century
First Century of SRT

சச்சின்...இது பல சாதனைகளை தொட்ட ஒரு சரித்திர நாயகனின் பெயர். நாளைய சரித்திரத்தில் இடம்பெற போகும் பெயர். ஒரு சில நாடுகளில் மட்டும் கிரிகெட் விளையாடினாலும் ,உலகின் அனைத்து நாடுகளுக்கும் கிரிகெட்டின்  மீது ஒரு ஆர்வத்தை விதைத்த பெருமை சச்சின் என்ற ஒரு தனி மனிதனையே சேரும். கிரிகெட் சூதாட்டத்தில் இந்திய வீரர்கள் சிக்கிய போது கிரிகெட்டின் மீது ரசிகர்களுக்கு ஏற்பட்ட அவநம்பிக்கையை  தன் தனித்திறமையால் போக்கி கிரிக்கெட் மீதான நம்பிக்கையை உயிர்பிக்க செய்த சாதனை மனிதன் . கிரிகெட் பற்றி தெரியாதவர்களுக்கு கூட சச்சின் என்ற நட்சத்திரத்தை தெரியும்.இங்கு மட்டையை பிடித்து ஆடத்துவங்கும் ஒரு சிறுவனுக்கும் ஆசை தானும் சச்சினை போல சாதிக்க வேண்டுமென்பது தான்,அப்படியெனில் அந்த நட்சத்திரம் எவ்வளவு பெரியதென்று.கிரிகெட்டை பற்றி தெரிந்த அனைவருக்கும் சச்சின் என்பது வெறும் பெயரல்ல அது ஒரு மந்திரம்.
sachin tendulkar final match
Final Match in Mumbai Wankhade Stadium

இந்தியா கலந்துகொள்ளும் அனைத்து போட்டிகளிலும் ஸ்கோர் தெரிந்து கொள்ள ஆர்வம் இருக்கிறதோ இல்லையோ, எடுத்தவுடன் கேட்கும் முதல் கேள்வி சச்சின் எவ்வளோ? . அப்படியெனில் அந்த பெயரின் மீது எவ்வளவு நம்பிக்கை என்று தெரிந்து கொள்ளலாம்.ஒரு நேரத்தில் ஒட்டுமொத்த அணியையும் தூக்கி சுமந்த பெருமை சச்சின் என்ற சாதனை நாயகனுக்கு மட்டுமே உரியது.சச்சினை வீழ்த்த பெரும் வியூகமே அமைத்து போராடும் அளவிற்கு எதிரணிக்குசிம்ம சொப்பனமாக திகழ்ந்த சூப்பர் மேன்.
final match of ranji

 24 ஆண்டுகள் தன் கடின உழைப்பால் தன் மீது ஒட்டு மொத்த தேசத்திற்கும் இருந்த நம்பிக்கையை தூக்கி சுமந்த சாதனை நட்சத்திரம். உலகின் எந்த ஒரு கிரிகெட் வீரருக்கும் இவ்வளவு ரசிகர்கள்(பக்த்தர்கள் ) உண்டா என்பது மிகபெரிய பெரிய கேள்வி, தனக்கு எதிராக விளையாடுபவரையும் தன் ஆட்டத்தால் தன் வசப்படுத்தும் தனிபெருமை சச்சினுக்கு மட்டுமே உரியது.
First double ton of sachin tendulkar
First Double Ton In ODI history


வயதாகி விட்டது இனி அவ்வளவு தான் சச்சின்,ஓய்வு பெற வேண்டும்  என்று அனைவரும் குறை கூறிக்கொண்டிருக்கையில் வயதானாலும் சிங்கம் சிங்கம் தான் என்று ,உலகின் முதல் வீரராக அதுவும் ஒரு நாள் போட்டியில் அதுவும் உலகின் பல முன்னணி வேகப்பந்து சூறாவளிகள் நிறைந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 200* அடித்து தன் திறமையை நிருபித்து காட்டிய தன்னம்பிக்கை, சச்சின் என்ற சாதனை நாயகனுக்கு மட்டுமே பொருந்தும்.
சாதனைக்காக விளையாடியதாக பல சிலர் குறைகளை கூறினாலும், சூரிய ஒளியில் மறையும் பனித்துளி போல தன் ஆட்டத்தால் மறைந்து போக செய்து,இன்றும் ஒளிர்ந்து கொண்டிருக்கும் சாதனை நட்சத்திரம்.
sachin final Match

சச்சின்  அடித்த ரன்களின் எண்ணிக்கை ஆயிரத்தில் இருந்தாலும்,சச்சின் வென்ற இதயங்களின் எண்ணிக்கை கோடிகளை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.தனிப்பட்ட ஒரு வீரருக்காகவே கிரிகெட்டை பார்க்கும் அளவுக்கு தன் திறமையால் கட்டிபோட்ட சாதனை நாயகனுக்கு விடை கொடுக்கும் நேரமும் நெருங்கி விட்டது.இதுவரை இந்திய கிரிகெட்டில் ஒளி வீசிக் கொண்டிருந்த அந்த சூரியன்(சச்சின்) தன் ஓய்வை நோக்கி நடைபோடத் துவங்கி விட்டது.இனி இந்திய அணியில் ஒரு மிகப்பெரிய வெற்றிடம் உருவாகப்போகிறது என்பது மட்டும் நிச்சயம்.

வெறும் சாதனைகளை மட்டுமே படைக்க பிறந்த சச்சின் ஒரு சஹாப்தம் தான் .சாதனைகளை மட்டுமே சுமந்த சச்சினுக்கு ஒரு சல்யூட்("Salute our Little Master SRT").


சச்சின்-சாதனைகளின் நாயகன் சச்சின்-சாதனைகளின் நாயகன் Reviewed by Unknown on Friday, November 15, 2013 Rating: 5

No comments:

Powered by Blogger.