அடிமை மொழி ஆளும் மொழியானால் ?

அடிமை மொழி ஆளும் மொழியானால் ? இங்கு அடிமை மொழி என்பது என்ன? அதன் வரலாறு தெரியுமா ?
அடிமை மொழியின் வரலாறு என்று கூறுவதை விட அடிமைகளின் மொழியின் வரலாறு என்று தான் கூற வேண்டும். தன் தாய் மொழியில் இருக்கும் பெருமைகளை அறியாமல் எங்கிருந்தோ வந்த ஒரு மொழியை உயர்த்தி பேசிக்கொண்டு திரியும் ஒரு கூட்டம் இவர்களை அடிமைகள் என்று கூறுவதில் எந்த தவறும் இல்லை.
Slavery language

அந்த அடிமை மொழியின் வரலாறு தெரியுமா ?
ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்தில் வாழ்ந்த ஆங்கிலோ-சாக்சன் என்ற சிறு மக்கள் குழுவின் மொழியான ஆங்கிலம் இன்று ஓர் உலக மொழியாக இருக்கிறது. 

 காலம் கி.பி (400 -1100)
 கிபி 5 ம் நூற்றாண்டளவில் பிரிட்டனை மூன்று யேர்மன் குழுக்கள் (ஆங்கில்சு, சாக்சன், யூட்) இன்றைய யேர்மன் / டென்மார்க் நிலப்பரப்பில் இருந்து ஆக்கிரமித்தன. இந்தக் குழுக்கள் தம்மிடையே புரிந்துக்கொள்ளக்கூடிய ஒத்த மொழிகளைப் பேசின. அப்போது அங்கு பேசப்பட்டு வந்த கெல்டிக் மொழிக் குழுக்கள் வடக்கேயும் மேற்கேயும் தள்ளப்பட்டன. "ஆங்கிலோ இனத்தவர்கள் “ஆங்லோ-லாந்து” எனும் பகுதியில் இருந்தே வந்தனர். இவர்கள் பேசிய மொழி "இங்கிலிசுக்" எனும் யேர்மனிய மொழிக் குடும்பத்து மொழியாகும். இப்பெயர்களே இன்று மருவி இங்கிலாந்து - இங்கிலிசு என்றானது." இக்காலத்திப் பேசப்பட்ட ஆங்கிலம் பழம் ஆங்கிலம் எனப்படுகிறது. ஏழாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சில ஆக்கங்கள் மட்டுமே இப்போது கிடைக்கின்றன. தற்கால ஆங்கிலத்தின் பெரிதும் புழங்கும் 50 விழுக்காடு சொற்களுக்கு பழ ஆங்கில வேர்கள் உண்டு.
 காலம் கி.பி (1100 -1500)
பிரான்சின் நோர்மண்டி சிற்றரசின் மன்னன் வில்லியம் இங்கிலாந்தை 1066 கைப்பெற்றினான். இந்த புதிய ஆக்கிரமிப்பாளர்கள் நோர்மன் எனப்பட்டனர். இவர்கள் ஒரு வகை பிரான்சிய மொழியைப் பேசினர். அரச அவையிலும், வணிகத்திலும் பிரான்சிய மொழியே செல்வாக்கு பெற்றது. ஆட்சித் தொடர்புடைய உயர் பிரிவு மக்கள் பிரான்சிய மொழியையும், பொது மக்கள் அல்லது கீழ்ப் பிரிவு மக்கள் ஆங்கிலத்தையும் பேசினர். இக்காலத்தில் பல பிரான்சிய சொற்கள் ஆங்கிலத்துடன் கலந்தன. இடைக்கால ஆங்கிலத்தில் எழுதப்பட்ட முக்கிய இலக்கியம் த கான்ட்டர்பர்ரி கதைகள் (The Canterbury Tales) ஆகும். நோர்மன் ஆக்கிரமிப்புக்கு பின்பு ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட முதல் அரச ஆவணம் புரொவிழ்சன்சு ஆவ் ஆக்சுபோர்டு (1258) (Provisions of Oxford (1258)) ஆகும். 1362 ஆம் ஆண்டு எட்வர்ட்-3 என்னும் அரசன் முதன் முதலில் ஆங்கிலத்தில் நாடுளுமன்றத்தில் பேசினான். ஆங்கிலத்தின் வளர்ச்சியில் இது ஒரு முக்கிய திருப்புமுனை ஆகும்.

காலம் கி.பி (1500 -1800)
 15 நூற்றாண்டின் இறுதியில் பெரும் உயிரெழுத்து மாற்றம் நிகழ்ந்தது. முதல் ஆங்கில அகராதி 1604 ஆண்டில் வெளியிடப்பட்டது. இக்காலப்பகுதிக்கு சற்று முன்பு கண்டுபிடிக்கப்பட்ட அச்சுத்தொழில்நுட்பத்தால் (1476) பல்வேறு நூல்கள் ஆங்கிலத்தில் வெளிவர தொடங்கின. பெரும்பான்மையான பதிப்பகங்கள் இருந்த இலண்டனின் வட்டார வழக்கு, தரப்படுத்தப்பட்ட ஆங்கிலமாக மருவியது. இக்காலத்தில் வாழ்ந்த சேக்சுபியர் (1564-1616) ஆங்கிலத்தின் 30 மேற்பட்ட நாடகங்களை இயற்றினார். இவை ஆங்கிலத்தின் உயர்ந்த இலக்கியமாக இன்றுவரை கருதப்படுகிறது. 1702 முதல் ஆங்கில நாளிதழ் த டெய்லி கூரான் (The Daily Courant) இலண்டனில் வெளியிடப்பட்டது. பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் 1768 - 1771 முதலில் வெளியிடப்பட்டது.

 காலம் கி.பி (1800 -Now)
1800 களில் தொழிற்புரட்சி இடம்பெற்றது. பிரித்தானியப் பேரரசு உலகின் பெரும்பாகத்தை தனது ஆளுமைக்குள் உட்படுத்தியது. அரசியல் பொருளாதார ஆளுமை இங்கிலாந்தின் ஒரு சிறு மக்கள் குழுவின் மொழியை உலக மொழியாக மாறியது. பல்லாயிரக்கணக்கான அறிவியல் தொழில்நுட்ப சொற்கள் ஆங்கிலத்தில் உருவாகின. 1922 பிபிசி ஒலிபரப்புச்சேவை தொடங்கி, ஆங்கிலத்தை பொதுமக்களிடம் எடுத்துசெல்ல உதவியது.
மேலும் ஆங்கிலேயர் ஆட்சி செய்த நாடுகளில் மட்டுமன்றி வர்த்தக, இராணுவ மற்றும் பல்வேறு தொடர்புகளை வைத்திருந்த நாடுகளில் பேசப்பட்ட வெவ்வேறு மொழிகளில் இருந்தும் பல சொற்களை ஆங்கிலம் உள்வாங்கிக் கொண்டது. ஒரு கணிப்பின் படி 146 மொழிகளில் இருந்து சொற்களை ஆங்கிலம் தம்மொழிக்குள் உள்வாங்கிக்கொண்டுள்ளது. தமிழில் இருந்தும் பலசொற்களை ஆங்கிலம் தம்மொழிக்குள் உள்வாங்கிக்கொண்டுள்ளது.
Reference:http://bit.ly/1byatHq

 என்ன தான் பல நூல்கள் பல இலக்கியங்கள் என்று பல உருவாகியிருந்தாலும் அதற்க்கெல்லாம் முன்னோடி நம் பாரத தேச மொழிகளே.இங்கு பல நூறு இலக்கியங்கள் இயற்றிய பிறகு தான் அங்கு இலக்கணம் என்ற ஒன்றே உருவாகியது அப்படி இருக்கையில் அதற்க்கு மட்டும் எப்படி இவ்வளவு சிறப்பும் வந்தது எப்படி?

எந்த ஒரு கலாச்சாரமும் அழிய யாரும் பாடுபட தேவையில்லை அதன் தாய் மொழியை அழித்து விட்டாலே போதும் அந்த கலாச்சாரம் அழிந்து விடும்.வெள்ளையர்கள் நம் நாட்டின் மீது படையெடுத்து அள்ளிச் சென்ற செல்வங்களை விட அவர்கள் நம் நாட்டின் பொக்கிஷங்களான பல அறிய புத்தகங்களை அள்ளிச் சென்றனர்.இன்று அவர்கள் கண்டு பிடித்ததாக கூறிக்கொள்ளும் அனைத்திற்கும் சொந்தக்காரர்கள் நம் பாட்டன்களே இது எத்தனை பேருக்கு தெரியும். 

வெள்ளையர்கள் நம் நாட்டை அழிக்க பயன்படுத்திய மிகப்பெரிய ஆயுதம் என்னவென்று தெரியுமா அவர்களின் மொழி.அவர்கள் ஆங்கிலத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்தியே நம் நாட்டை கொள்ளை அடித்தனர். இன்னும் அதையே தான் செய்து கொண்டுள்ளனர் இது புரியாமல் இங்கு பல அடிமைகள் சுற்றிக்கொண்டுள்ளனர்.

இது எல்லாவற்றிற்கும் மூல காரணம் என்பது வேறு, இந்த வீழ்ச்சிக்கு முதல் காரணம் நம் அறியாமை தான்.அவர்களுக்கு நன்றாக தெரியும் நம்மை எப்படி கையாள வேண்டும் என்று அவர்களின் சரியான இலக்கு நம் பலவீனம் .நம் பலவீனம் நம் பொருளாதாரம். அவர்கள் சரியாய் பயணித்து அவர்களின் மொழியையும் கலாச்சாரத்தையும் நம்மில் எளிதாக விதைத்து விட்டார்கள். அதன் விரிட்ச்சங்கள் இன்று முளை விட துவங்கிவிட்டன.மேற்க்கத்திய கலாச்சாரம் நம்மிடையே நுழைய துவங்கி விட்டது.

பல்வேறு படையெடுப்புகளின் விளைவாக நம் பழம்பெரும் பொக்கிஷங்களான பல இலக்கியங்களை இழந்து விட்டோம். நம்மை சுற்றி தெரிந்தும் தெரியாமலும் பல சதி வேலைகள் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன .இன்னும் நாம் விழிக்க விட்டால் அந்த அடிமை மொழியே நம்மை ஆளும் மொழியாக ஆனாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை!
அடிமை மொழி ஆளும் மொழியானால் ? அடிமை மொழி ஆளும் மொழியானால் ? Reviewed by Unknown on Wednesday, October 16, 2013 Rating: 5

No comments:

Powered by Blogger.