எங்கே என் அழகிய தேசம்?

அழகிய காலை பொழுது  கதிரவன் பட்டொளி வீசி தன் கடமையை செய்ய வந்துகொண்டிருக்கிறான்.இளம் காற்று தென்றலாய் ஸ்பரிசத்தை தழுவி சென்றது.எங்கும் பசுமை ,திரும்பிய திசையெங்கும் இயற்கை அன்னை பச்சை பட்டுடுத்தி அழகுடன் கட்சி அளிக்கிறாள்.சாலைகள் எங்கும் புழுதி படர மாடுகள் பூட்டிய வண்டிகளின் சத்தம் ரீங்காரமாய் ஒலித்துக்கொண்டிருக்க இளம் காலை பொழுது அழகாக விடிந்தது.
Village

 இன்று அல்ல சுமாராக ஒரு 15 வருடங்களுக்கு முன்னால் நான் கண்ட காட்சிகள் இது.அப்பொழு தார் சாலைகள் என்பது நெடு தூரம் கடக்கும் பாதைகளுக்கே உண்டு .கிராமங்கள் எவ்வளவு அழகாக இருக்கும் என்பதை காலச்சக்கரத்தை பின்னோக்கி கொண்டு சென்றால் மட்டுமே காண முடியும்.அந்த அளவுக்கு நிலைமை மாறிக்கொண்டிருக்கிறது.

கிராமங்கள் என்றதும் அனைவருக்கும் கண் வருவது பசுமை நிறைந்த வயல் வெளிகளும் ,ஓங்கி நிற்கும் மரங்களும் தான் இன்று அவற்றின் இளமை கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து கொண்டு வருகிறது.காரணம் மக்கள் தொகை பெருக்கம் என்று அனைவரும் கூறுவார். ஆனால் அது தான் உண்மையான காரணமா இல்லவே இல்லை பேராசை.தான் பார்க்கும் அனைத்தையும் தனதாக்கி கொள்ளும் ஆசை.

அதன் விளைவு ஒரு காலத்தில் விவசாயியின் நண்பன் என்று அழைக்கப்படும்    மண் புழு இன்று காண்பதே அரிதாகி வருகிறது, தோழனாய் சுமைகளை தாங்கி நிழல் கொடுத்த மரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன, காமதேனுவாய் வாரி வழங்கிய பூமித்தாய் இன்று மலடியாகி கொண்டிருக்கிறாள்.இதன் ஒட்டு மொத்த விளைவு தான் இன்று நாம் சந்தித்து கொண்டிருக்கும் இயற்கையின் தாண்டவம்.

தென்னிந்தியாவில் மழைக்காக அனைவரும் வானத்தை நோக்கி பார்த்து காத்து கிடக்க, வடக்கு புகுதியில் வெள்ளமாய் பெருக்கெடுத்து எண்ணிலடங்கா உயிர்களையும் ,உடமைகளும் தனதாக்கி கொண்டு சென்று கொண்டிருக்கிறாள் யமுனா நதி.

drought in south india


இயற்க்கை ஆர்வலர்கள் கேதார்நாத் பேரழிவு பற்றி கூறியுள்ளனர் "1980 களில் ஒரு கோவில் மட்டுமே இருந்த இடத்தில் இன்று ஒரு நகரமே உருவாக்கி விட்டனர் ,அது மட்டுமின்றி மந்தாகினி ஆற்றின் போக்கையே மாற்றி விட்டனர்  " அதன் விளைவு தான் இன்று சந்திதுக்கொண்டிருக்கிறோம்.ஒரு சில வருடங்கள் மட்டும் வாழ்ந்து விட்டு செல்லும் நமக்கே இவ்வளவு திமிரென்றால் உலகையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இயற்க்கை அன்னைக்கு எவ்வளவு இருக்கும்.தன்னை மீறி எதுவும் இல்லை என்று நாம் நினைத்தோம் ,என்னை ஆள உன்னால் முடியாது என்று காட்டி விட்டால்.
Flood in Kedarnath
Kedarnath Flood

Kedarnath Shiva Temple
Kedarnath Shiva Temple-Before Flood

Kedarnath Shiva Temple After Flood
Kedarnath Shiva Temple-After Flood

Kedarnath Shiva Statue in flood
Kedarnath Shiva Statue-in Flood of yamuna
என்னதான் நாம் புதிது புதிதாக கண்டறிந்தாலும் இயற்கையின் நியதியை மாற்ற முடியாது.மனிதனின் கண்டு பிடிப்புகள் அனைத்துமே இயற்கையின் கீழ்த்தான் இதை அறியாமல் நாம் இயற்கையை மிஞ்சி விட்டதாக ,மார்தட்டி கொள்கிறோம்.இதை இயற்க்கை பலமுறை நமக்கு உணர்த்தி விட்டது பூகம்பங்கள்(Earth Quake),கடல் சீற்றம் (Tsunami),வெள்ளப் பெருக்கு(Flood). என்று அதுவும் நிரூபித்து கொண்டுதான் இருக்கிறது நாமும் நம் தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் மேலும் மேலும் தவறுகளை செய்து கொண்டு தான் இருக்கிறோம்.

"உயிரற்ற கட்டிடங்கள் வாழ உயிருடன் இருக்கும் மரங்கள் வேட்டையாட படுகின்றன" நாம் வாழ உணவு தான் அவசியம் என்று தெரியும்,அதற்கு தேவையான பணத்தை பெற நன்கு உழைக்க தெரியும். ஆனால் இவை அனைத்திற்கும் மேலாக அந்த உணவுப்பொருள் விளைய நிலம் வேண்டும் என்று மட்டும் நமக்கு தெரியாது.என்ன தான் டெக்னாலஜி வளர்ந்தாலும் பசித்தால் உணவை தான் உன்ன முடியும் கம்ப்யூட்டர் கிபோர்ட்(Computer Keyboard) ,மௌஸ்(Mouse) அல்லது கல் கட்டிடம்(Building) என எதையும் உண்ண முடியாது.
Deforestation

நகரங்களில்(City) இருக்கும் பலர் கிராமத்தை சேர்ந்தவர்களை பொழுது போக்குக்காக பட்டிக்காட்டான் என்று அழைப்பதுண்டு. "அந்த பட்டிக்காட்டான் சேற்றில் கால் வைக்காவிட்டால் நீங்கள் சோற்றில் கை வைக்க முடியாது " என்பதை உணரும் காலம் விரைவில் வரும்.

நம் பேராசை பல உயிரினங்களை பூமியிலிருந்து வெளியேற்றி விட்டது.இன்னும் அதையே தொடந்து கொண்டிருந்தாள் ஒட்டு மொத்த மனித இனமும் இந்த பூமியிலிருந்து வெளியேற்ற படக்கூடிய நாள் வெகுதூரத்தில் இல்லை.

தாய் தன் பிள்ளைகளின் தவறை சுட்டி காட்டுவது போல இப்பொழுது சிறிய அளவில் சுட்டி காட்டுகிறாள். இன்னும் நாம் திருத்திக்கொள்ளாவிட்டால் அவளின் தண்டனையிலிருந்து யாரும் தப்ப இயலாது.

இயற்கையோடு சேர்ந்து வாழாமல் செய்யும் எந்த ஒரு செயலின் விளைவும் நாம் கற்பனை செய்வதை விட பயங்கரமாக இருக்கும் என்பதை இனியாவது உணர்வோம். எவ்வளவு தான் வளந்தாலும் தாய்க்கு நாம் பிள்ளைகளே அதை உணர்ந்தாலே எல்லாம் நலமாய் அமையும்.கண்ணுக்கே தெரியாத கடவுளை வணங்கும் நாம்-நம்மையே வாழவைக்கும் இயற்கையை வணங்குவதில் தவறேதும் கிடையாது"
             "இயற்கையை பாதுகாப்போம் -நலமுடன் வாழ்வோம்"

எங்கே என் அழகிய தேசம்? எங்கே என் அழகிய தேசம்? Reviewed by Unknown on Friday, June 21, 2013 Rating: 5

No comments:

Powered by Blogger.