இன்றைய முக்கிய செய்தி?

நாட்டின் தலையெழுத்தையே மாற்ற போகும் இன்றைய செய்திகள் தான் இது.
இவர்கள் தான் ஒவ்வொரு நாளும் உலகில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் நமக்கு அளிப்பவர்கள்.


































இந்திய சுதந்திர போராட்டத்தில் பத்திரிக்கைகள் முக்கிய பங்குவகித்தன.தகவல் தொழிற்நுட்பம் வளராத அந்த காலகட்டத்தில் மக்களை ஒன்றிணைக்க பத்திரிகைகள் பயன்பட்டன.ஆனால் இன்று அதன் பயன்பாடு வேறு மாதிரி ஆகிவிட்டது. மக்களை திசைதிருப்பும் பல  வேளைகளில் ஈடுபட துவங்கிவிட்டன.

இது சிறிய அளவிலான பத்திரிகைகளில் துவங்கி நாடு முழுவதும் மக்கள் படிக்கும் பத்திரிக்கைகள் வரை இது போன்ற செய்திகள் தான் முதன்மையாக இருக்கின்றன.இது போன்ற செய்திகளுக்கு வக்காலத்து வாங்குபவர்களும் உண்டு.

முன்னர் மக்களுக்காக ஒரு சேவையாக துவங்கப்பட்ட பத்திரிகைகள் இன்று ஆளும் கட்சி ,எதிர் கட்சி என அரசியல் உள்நோக்கத்துடனேயே துவங்க படுகின்றன.இவர்கள் ஆட்சியில் இருக்கும் போது அவர்களை குறைகூறவும் ,அவர்கள் ஆட்சியில் இருக்கும் போது இவர்களை குறைகூறவும் தான் பெரும்பாலும் பத்திரிக்கைககள் பயன்படுகின்றன.

இதில் ஆட்சி மாறும் போதெல்லாம்  கட்சி தாவும் பத்திரிக்கைகளும் இருக்கத்தான் செய்கின்றன. இன்றும் பல போராட்டங்களை மக்களிடம் பத்திரிகைகள் எடுத்து செல்கின்றன பின்னர் வேறு ஒரு பிரச்சனையை முன்னிறுத்தி மக்களை எளிதில் மறக்கடிக்க செய்துவிடுகின்றன.

இன்றைய சூழலில் பத்திரிக்கைகளின் துணையில்லாமல் எந்த ஒரு போராட்டத்தையும் வெற்றி பெற செய்ய இயலாது என்ற சூழ்நிலையில்.இவர்கள் செய்வது வெறும் 20% மட்டும் தேவையானவற்றை போட்டுவிட்டு 80% தேவையில்லாத செய்தியையே போடுகின்றனர்

நாட்டிற்கு பெருமை சேர்த்த சாதனையாளர்களின் செய்தியை ஒரு பெட்டி செய்தியை போட்டுவிட்டு. கலாச்சாரத்திற்கு கலங்கம் விளைவிக்கும் ஒரு செய்தியை முன்னிறுத்துவது தேவையா?

இது வெறும் பத்திரிகைகள் மட்டுமல்ல தொலைக்காட்சிகள் இதற்க்கு சற்றும் சலைத்ததல்ல அதில் ஒழி பரப்பாகும் பெரும்பாலான தொடர்கள் பல கள்ள காதல் கதைகளை முன்னிறுத்தியே இருக்கின்றன.

இதை பற்றி யாரேனும் கூறினால் இது பத்திரிகை சுதந்திரம் என்று கோஷம் எழுப்புவார்கள்.எது எப்படியோ இது தான் நம் தலை விதி என்றாகி விட்டது எனும் போது நாம் தான் நமக்கு தேவையானவற்றை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

"இது தான் நம் நாட்டின் தலைவிதி , நாட்டிற்கு மட்டுமல்ல நமக்கும் தான் "


இன்றைய முக்கிய செய்தி? இன்றைய முக்கிய செய்தி? Reviewed by Unknown on Tuesday, June 18, 2013 Rating: 5

No comments:

Powered by Blogger.