யார் இந்த நாட்டின் எதிர்காலம் ?

யார் இந்த நாட்டின் எதிர்காலம் ?
இந்த கேள்விக்கு அனைவரும் கூறும் பதில் மாணவர்களே இந்த நாட்டின் எதிர்காலம் என்று கூறுவர் ஆனால் அவர்களின் நிலை எப்படி உள்ளது. நல்ல கல்வியால் மட்டுமே நல்லதொரு மாணவனை நாட்டிற்கு தர முடியும் .அப்படி பட்ட கல்வியின் நிலைதான் என்ன?

கல்வி..கல்வி என்பது என்ன?.எத்தனை பேருக்கு இதற்க்கான விடை தெரியும் ,நிறைய பேருக்கு கல்வி என்பது ஒரு பணம் கொடுக்கும் மரமாகவே தெரிகிறது ,ஆனால் நிஜம் வேறு இன்றைய சூழ்நிலையில் வாழ்க்கையில் வெற்றி பெற கல்வி மிக முக்கிய ஒன்றாக மாறிவிட்டது.


Our Educational System
நம் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்கள் கூறினார் "மாணவர்களே நாட்டின் எதிர்காலம்" என்று, ஆனால் இது எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை, இந்த கல்வி தொழிற்ச்சாலையில் உருவாக்கப்படும் எந்த ஒரு பொருளும்  தரமானதாக இல்லை என்று தான் கூற வேண்டும். இந்த தொழிற்ச்சாலையில் மாணவர்களுக்கு நிஜமான கல்வியின் அவசியத்தை யாரும் போதிப்பதில்லை. அங்கு அவர்களுக்கு எப்படி மனதில் பதிய வைத்து தேர்வில் 100 மதிப்பெண் எடுப்பது என்பது பற்றி மட்டுமே கற்றுகொடுக்கப்படுகிறது.இதற்க்கு முக்கிய காரணம் அவர்களின் குறிக்கோள் பணம் ஈட்டுவது மட்டுமே. பின் எப்படி அவர்கள் நாட்டை வழிநடத்துபவர்களாக வருவார்கள். இந்நிலைக்கு இவர்களை மட்டும் குறை கூறி ஒன்றும் செய்ய இயலாது.

Our Educational System
அடுத்து பெற்றோர்கள் ,எத்தனை பெற்ற்றோர்கள் தன் பிள்ளையின் கனவு என்ன? அவனால் இது முடியுமா ?என்று நினைக்கின்றனர். எத்தனை பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் என்ன கற்று கொண்டாய் இன்று என்று கேட்கிறார்கள்,அடுத்து வரும் தேர்வில் எத்தனை மதிப்பெண் எடுப்பாய் என்றுதான் எனக்கு தெரிந்து எல்லா பெற்றோரும் கேட்கும் கேள்வி ,அவர்களின் சிந்தனை மகன் அல்லது மகளின் எதிகாலம் நன்றாக இருக்க வேண்டும் என்பது தான் இருந்தாலும், பெரும்பாலான பெற்றோர் நினைப்பது நாம் பணம் செலவழிக்கிறோம் அதற்க்கு அவர்கள் 100/100 மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பது மட்டுமே ,அது எத்தனை பிள்ளைகளுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை ,தங்கள் பிள்ளையால் எவ்வளவு படிக்க முடியும் மற்றும் அவர்களுக்கு வேறு என்ன திறமை உள்ளது என்பதை எத்தனை பெற்றோர்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. பிறகு எப்படி இந்தியா வல்லரசு நாடாக மாறும்?

அடுத்து அரசு ,சுதந்திரத்திற்கு பிறகு பல ஆட்சிகள் மாறிவிட்டன ஆனால் யாரும் இந்த மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கவில்லை ,அவர்களுக்கு அடுத்து எப்படி இந்த ஆட்சியை தக்க வைத்து கொள்வது மட்டுமே அவர்களுக்கு இருக்கும் எண்ணம் ,எந்த ஒரு அரசும் கல்வியை முன்னேற்ற எதுவும் செய்யவில்லை ,நாட்டில் பள்ளி ,கல்லூரிகளின் எண்ணிக்கை மட்டுமே அதிகரித்து கொண்டிருக்கிறது ,கல்வியின் தரம் மட்டும் குறைந்து கொண்டே செல்கிறது ,மேடைக்கு மேடை பேசும்போது மட்டும் எல்லா தலைவர்களும் கூறும் கருத்து "மாணவர்களே நாட்டின் தூண்கள் ",வலுவிழந்து நிற்கும் இந்த தூண்களா இந்த தேசத்தை தாங்கி  நிறுத்த போகிறது?

பின் யார்தான் இதற்க்கு பொறுப்பு அரசா,பெற்றோரா,மாணவர்களா அல்லது ஆண்டுக்கு 100% தேர்ச்சி மட்டுமே கொடுக்கும் கல்வி நிறுவனங்களா ,நீங்கள் யாரையாவது கையை காட்டினால் அது வேறொரு பக்கம் கையைகாட்டும் ,ஏனென்றால் நமக்கு தெரிந்தது அது மட்டும் தான்.

இதற்க்கு ஒரே தீர்வு கல்வி நிறுவனங்கள் கல்வியை ஒரு தொழிலாக பார்க்காமல் ,கல்வியை ஒரு சேவையாக செய்ய வேண்டும் ,கல்வி முறையில் மாற்றத்தை புகுத்தி கல்வித்தரத்தை உயர்த்த வேண்டும்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் திறமையை வெளிகொணர்ந்து அவர்களை உற்சாகபடுத்தி அவர்களின் முன்னேற்றத்துக்கு உதவ வேண்டும் ,எந்த ஒரு மாணவனும் முட்டாள் இல்லை ,அனைவருக்கும் எதோ ஒரு திறமை உண்டு என்பதை பெற்றோர்கள் முதலில் புரிந்து கொண்டு அவர்களை வழிநடத்த வேண்டும்.

மாணவர்கள் அவர்களின் எதிகாலத்தை மனதில் கொண்டு படிக்க வேண்டும் ,முதலில் கேள்வி கேட்க கற்று கொள்ள வேண்டும்,ஏன் ,எதற்கு ,எப்படி என்று கேள்வி கேட்டாலே அவர்களின் திறமை தானாக வளரும் ,அதை தான் பெரும்பாலும் செய்வது கிடையாது.படித்து முடித்ததும் நம்மை வளர்த்த நாட்டிற்கு எதாவது செய்ய வேண்டும் என்று என்ன வேண்டும் ,வெளிநாட்டில் சென்று குடியமர்வதையே எண்ணமாக கொண்டு படிக்க கூடாது.நாட்டின் எதிர்காலம் இன்றைய மாணவர்களின் கையில் மட்டுமே உள்ளது என்பதை உணர வேண்டும்.

இந்நிலை முற்றிலும் மாற அரசால் மட்டுமே முடியும் , உலகம் என்ன வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது அதற்கு ஏற்றார் போல கல்வி முறையிலும் மாற்றம் கொண்டு வர வேண்டும்.நாட்டின் பாதுகாப்பு ஆயுதத்தில் மட்டும் இல்லை ,பேனா முனையிலும் உள்ளது. .கல்வி மட்டுமே நம் நாட்டை வல்லரசாக்க உதவும் ,இதை அரசு உணர்ந்து கல்வி முறையில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.

அப்படி ஒன்று நடக்கவில்லையெனில்  நாம் எப்பொழுதும் கூறுவது போல
" 2020 இந்தியா வல்லரசு ஆகிவிடும் " என்பது வெறும் கனவாகவே ஆகிவிடும்.

"Without Education our nation never going to be Top of the world Nation"
யார் இந்த நாட்டின் எதிர்காலம் ? யார் இந்த நாட்டின் எதிர்காலம் ? Reviewed by Unknown on Tuesday, June 18, 2013 Rating: 5

No comments:

Powered by Blogger.