என் கனவு - கல்வியில் தன்னிறைவு பெற்ற தேசம்



"என் கனவு அனைவரும் கல்வி  பயில இயலும் நிலையை உருவாக்கும் தேசம் "



இன்றைய சூழலில் நாட்டின் மிகப்பெரிய தொழிற்சந்தையாக மாறிக்கிடக்கிறது கல்வி நிலையங்கள். ஒரு காலத்தில் சேவையாக துவங்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் இன்று வியாபார நோக்கத்துடன் துவங்கபடுகின்றன. அதன் விளைவு இன்று கல்வியின் தரம் நினைத்துகூட பார்க்க முடியாத அளவுக்கு உள்ளது .

பழமொழி ஒன்று உண்டு 

      "ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது " 
இந்த பழமொழி இன்றைய கல்வியின் நிலைமைக்கு சரியாக பொருந்தும்.

கல்வி நிறுவனகளின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போகிறதே தவிர கல்வியின் தரம் உயந்த பாடில்லை.  இவர்கள் செய்யும் அழகிய விளம்பரங்களை நம்பி தம் குழந்தைகளின் கனவு என்ன என்றுகூட கேட்காமல் அவர்களுக்கு நல்லது செய்வதாய் நினைத்து அவர்களின் எதிர்காலமே இருட்டறைக்கு தள்ளபடுகிறது.

அந்த காலத்தில் ஒரு கூற்று உண்டு 

"ஆயிரம் கோவில்கள் கட்டுவதை விட ஒரு ஏழைக்கு கல்வி பயிற்ருவிப்பதே புண்ணியம் என்று "

அந்த கூற்றை எந்த அளவு வியாபார உக்த்திக்கு பயன்படுத்திக்கொள்ள முடியுமோ அந்த அளவுக்கு பயன்படுத்திக்கொள்ள துவங்கிவிட்டனர்.
ஆயிரம் கோவில்கள் கட்டினாலும் வராத செல்வத்தை ஒரே ஒரு பள்ளியை கட்டி சம்பாதித்து விடுகின்றனர்.
ஒரு காலத்தில் இலவசமாக கூரை கொட்டகையில் விளக்கு வெளிச்சத்தில்  படித்து நாட்டிற்கே வழிகாட்டிய பல அறிஞர்கள் நம் நாட்டில் உண்டு.
ஆனால் இன்று நடந்து கொண்டிருப்பது என்ன ஏசி கட்டிடம் ,மின் விளக்கு, தொழிற்நுட்ப வசதிகள் என அனைத்தும் அனைத்தும் இருந்தும் நம்மால் ஒரு தலைவனையும் உருவாக்க முடியவில்லையே ஏன்.இன்றைய கல்வி முறை முதுகெலும்பில்லாத ஒரு இளைய தலைமுறையை தான் உருவாக்கி உள்ளது. 

நம் முன்னால் குடியரசு தலைவர் ஏ.பி .ஜே  அப்துல் கலாம் அவர்கள் சொன்னார் கனவு காணுங்கள் என்று இன்றைய பெரும்பாலான இளைஞர்களின் கனவு ஒரு எல்லைக்குள்ளேயே முடிந்துவிடுகிறது, வெறும் கனவு மட்டுமே நிஜமாகாது என்பது இன்னும் புரிந்துகொள்ளாமல் பலர் இருக்கின்றனர். 

 சராசரியாக ஆண்டுக்கு 5 இலட்சம் மாணவர்கள் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வெளியே வருகின்றனர் அவர்களில் கேம்பஸ் இண்டர்வியு(வளாக தேர்வு) இதில் தேர்வாகுபவர்களின் எண்ணிக்கை மிக மிக சொற்பம் .  மீதமுள்ளவர்கள் அனைவரும் வந்து சேருமிடம் நாட்டின் முக்கிய நகரங்களான சென்னை (அ ) பெங்களூரு . 

விளையாட்டாக ஒன்று கூறுவார்கள் 
               "கத்தரிக்கா முத்துனா சந்தைக்கு வந்து தான ஆகணும் "
அப்படி முடித்துவிட்டு  வருபவர்களை இலவசமாக கூட வாங்க யாரும் முன் வருவதில்லை.

மாற்றம் வேண்டும் வேண்டும் என்று கூரிகொண்டிருக்கிரோமே தவிர யாரும் அதை  யாரும் முன்னிறுத்தி போராட தயாராக இல்லை .  கல்வி முறையில் மாற்றத்தை கொண்டு வருவதை விட பெருகி வரும் கல்வி நிறுவனகளுக்கு புதிய விதிமுறைகளை விதித்து ,அவற்றை ஒழுங்கு படுத்தினாலே கல்வி முறையில் சிறிய அளவு மாற்றம் உண்டாகும். இது தற்காலிக தீர்வு தானே ஒழிய நிரந்தர தீர்வு அன்று. என்று கல்வி வியாபாரமல்லாமல் சேவையாக மாற்றப்படுகிறதோ அன்று தான் கல்வியில் நம் தேசம் தன்னிறைவு பெரும். அது வரை மாற்றத்திற்காக காத்திருப்போம்.............................
என் கனவு - கல்வியில் தன்னிறைவு பெற்ற தேசம் என் கனவு - கல்வியில் தன்னிறைவு பெற்ற தேசம் Reviewed by Unknown on Monday, June 17, 2013 Rating: 5

No comments:

Powered by Blogger.