நூலிழையின் பந்தம்

Raksha Bandhan

சின்ன சின்ன சண்டைகள்,சின்ன சின்ன குறும்புகள் இது எந்த உறவுகளுக்குள்ளும் நிகழும் ஒரு அழகிய நிகழ்வு.அதுவும் சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்குள் நிகழும் போது அதன் அழகே தனி தான்.அண்ணன் தங்கை,அக்கா தம்பி இவர்களுக்குள் என்ன தான் சண்டைகள் வந்தாலும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பின் அளவு மட்டும் என்றும் குறைவதில்லை அது மரணத்தின் வாயில் வரை மனதுக்குள் இருந்துகொண்டே தான் இருக்கும்.ஒரு சகோதரன் இரண்டாவது தந்தையாக இருக்கிறானோ இல்லையோ நிச்சயம் ஒரு சகோதரி இரண்டாவது தாய்க்கு சமமானவள் என்பது மட்டும் நிதர்சனமான உண்மை . அந்த அற்புத உறவை நினைத்து கொண்டாடும் ஒரு அழகிய விழா "ரக்ஷா பந்தன்".

 இதற்கென்று ஒரு பெரிய வரலாறே உள்ளது இதன் துவக்கம் புராண காலத்திலிருந்து துவங்குகிறது. இது நான் படித்த ஒன்று(Source: http://goo.gl/nIVbpe )

புராணக் கதை 
                    பலி என்ற மன்னன் விஷ்ணுவின் தீவிர பக்தன். பலியின் ராஜ்ஜியத்தைக் காக்க சத்தியம் கொடுத்ததால் வைகுண்டத்தை விட்டு வந்தார் லட்சுமி தேவி விஷ்ணுவிடம் இருக்கப் பிரியப்பட்டு ஒரு பெண் வேஷம் இட்டுக்கொண்டு பலியிடம் அடைக்கலம் புகுந்தாள் அப்போது பூர்ணிமா தினம் அன்று, அவனை சகோதரனாக பாவித்து ராக்கி கட்டி விட்டாள். 
வரலாறு
                   மாமன்னர் அலெக்சாண்டருக்கும், போரஸிசிர்க்கும் இடையே கடுமையான போர் நடந்து கொண்டு இருந்தது. அப்போது அலெக்சாண்டரின் மனைவி போரஸின் கூடாரத்திற்கு சென்று போரஸின் கையில் ஒரு ராக்கியை கட்டிவிட்டு வந்தவழியே திரும்பிவிட்டாள்.

   மறுநாள் போரில் அலெக்சாண்டரை கீழே தள்ளி ஈட்டியை பாய்ச்ச எண்ணிய போரஸ் தன் கையில் இருந்த ராக்கியை பார்த்து விட்டு, "உனது மனைவி என்னது சகோதரி. என் சகோதரி விதவையாக கூடாது" என்று கூறி திரும்பி சென்றதாக வரலாறு.
More Info: Raksha Bandhan 

இது போன்ற பல வரலாற்று சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.இந்த தகவல்கள் சரியானதா என்று தெரியவில்லை ஆனால் இதன் துவக்கம் நிச்சயம் உறவுகளுக்குள் பின்னியிருக்கும்  நம் தேசத்திலிருந்து தான் துவங்கியிருக்கும்.இதன் துவக்கம் வடக்கிலிருந்து ஆரம்பித்தாலும் இன்று நம் தேசம் முழுவதும் ஒரு சேர கொண்டாடப்பட்டு வருகின்றது.

இன்று உலகமே வியக்க கொண்டாடிக்கொண்டிருக்கும் இந்நாளில் சிந்தித்து பார்க்க வேண்டிய ஒரு முக்கியமான ஒன்று, இது போன்ற உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விழாக்கள் பெயரளவிற்கு மட்டுமே இருக்குமோ என்று. உலகமே நம் உறவுகளின்  பந்தத்தையும், கலாச்சாரத்தையும் நினைத்து வியந்து பார்க்கும் இந்நேரத்தில் நாம் வெட்கி தலை குனிய வேண்டிய அளவுக்கு சம்பவங்கள் இன்றும் நடந்து கொண்டேதான் இருக்கிறது.

பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள், எவ்வளவோ சமுதாய மாற்றங்கள் வந்துகொண்டு தான் இருக்கின்றன. எந்த ஒரு மாற்றம் இந்த வன்முறைக்கு ஒரு தீர்வை மட்டும் ஏற்படுத்தவேயில்லை, தகவல் தொழில்நுட்ப முன்னேற்றம் சமுதாயத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்றுள்ளது எந்த அளவு தவிர்க்க முடியாத உண்மையோ அந்த அளவுக்கு உண்மை நம்மை வீழ்ச்சி பாதிக்கும் இட்டுச் சென்றுள்ளது. 

தினம் தினம் இது போன்ற எவ்வளவோ சம்பவங்கள் நடந்து கொண்டு தான்  உள்ளது. இதை தடுக்க வேண்டிய அரசும் வேடிக்கை பார்த்துக் கொண்டு தான் உள்ளது. இதை அரசு தான் தடுக்க வேண்டும் என்று குரல் கொடுக்கும் நாம், உண்மையிலேயே அந்த மாற்றம் நிகழ வேண்டியது நம் ஒவ்வொருவர் மனதிலும் தான் என்பதை மட்டும் ஏற்றுகொள்ளத் தயாராக இல்லை.இந்த பெண்கள் மீதான அடக்குமுறை ஒவ்வொரு ஆணின் மனதிலும் அடியாழ பதிந்து விட்ட ஒன்று, அதை அவ்வளவு சீக்கிரம் மாற்றுவது என்பது கடினமான ஒன்று, ஆனால் இப்பொழுது அந்த மாற்றம் சிறிது சிறிதாக நடந்து கொண்டே தான் உள்ளது. விரைவில் அந்த மாற்றம் முழுவதும் ஏற்படும் என்பதை மட்டும் நம்புவோம்.

இன்று ரக்ஷா பந்தன், உலகமே வியக்க கொண்டாடும் இந்நாளில் நம்மை நேசிக்கும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும்,தோழியருக்கும்  வாழ்த்துக்களை கூறிக்கொள்வோம்.

நூலிழையின் பந்தம் நூலிழையின் பந்தம் Reviewed by Unknown on Monday, August 19, 2013 Rating: 5

No comments:

Powered by Blogger.