தலைவா-ஒரு பார்வை

தலைவா - இதற்க்கு விமர்சனம் எல்லாம் எழுத போவதில்லை,நான் என் அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன் அவ்வளவு தான்.இதுவரை "டான்" கள் பற்றிய படங்களை பார்க்காதவர்களுக்காக  படைக்கப்பட்ட  படைப்பு.
Thalaivaa

FlashBack
மும்பையில் வாழும் தமிழர்களுக்காக தாதாவாக மாறிய  அப்பா சத்யராஜ்,கதைப்படி வேதா பாய் க்கு பின் அந்த தமிழ் மக்களை காப்பாற்ற ஆளில்லாமல் போக அந்த பொறுப்பை சத்யராஜ் ஏற்கிறார்(வேதா பாய் யாருன்னு கடைசி வரைக்கும் காட்டவே இல்ல). வழக்கம் போல வில்லன்களால் சத்யராஜ் மனைவி கொல்லப்பட,வில்லன்களை அழித்துவிட்டு தாதாவாக மாறுகிறார்.தன்னால் தன் மகனுக்கும் ஆபத்து வந்துவிட கூடாது என்பதற்காக அவனை நாசருடன் ஆஸ்திரேலியா அனுப்புகிறார்.நாசர் யாரென்றால் வேதா பாய்க்கு பின் அந்த அளவு பவர்புல் மேன் ,ஆனா அவரு ஜூட் விட்டுறார் ,அதனால அந்த பொறுப்பு அப்பா சத்யராஜ்கு வருது.அவ்வளோ தான் நாசர் கதை முடிஞ்சிட்டு .(எதுக்காக இந்த சீனுக்கு நாசர்னு தெரியல)

Main Story:
ஆஸ்திரேலியா க்கு போன விஜய் அங்க ஒரு தண்ணீர் சப்ளை(Water Bottle) பண்ணுற கம்பெனி நடத்துறாரு அதோட தமிழ் பசங்க அப்படின்னு ஒரு டான்ஸ் டீம் நடத்துறாரு.அப்போ அவுங்க டீம் ரிஜெக்ட் பண்ணிடுவாங்க அப்போ ஒரு திட்டம் போட்டு தமிழ் பசங்க டான்ஸ் ஆடி செலக்ட் ஆவாங்க.


ஒரு நாள் சூப்பர் மார்கெட்டுக்கு தண்ணி பாட்டில் சப்ளை செய்ய போற விஜய் அமலா பால சந்திக்கிறார்.அவருக்கு ரொம்ப பிடிச்சுருக்கு.விஜய் எதார்த்தமா அவரோட நீயூ ஆர்டர்(New Order) வாங்க போறப்போ அமலா பால் வீட்டுக்கு போறாரு அப்பவே ரெண்டு பேருக்கும் லேசா காதல் பூத்துடுது.இதுல சந்தானம் அமலா பால ஒரு தலையா ரூட்டு விடுறாரு,அவர போலவே ஆஸ்திரேலியால தமிழ் பேச்சலர்ஸ்(Bachelors-ரொம்ப வருஷமா) ஏதாச்சும் தமிழ் பொண்ணு வராதா கல்யாணம் பண்ண முடியாதான்னு ஏங்கி இருக்காங்க அவுங்களும் அமலா பாலுக்கு ரூட்டு விடுறாங்க.அவுங்களுக்காக நம்ம ஹீரோயின் கல்யாணம் ஆகிட்டுன்னு சொல்லறாங்க அது யாருன்னா நம்ம யூ-டியூப் சூப்பர் ஸ்டார் "சாம் ஆண்டர்சன்(Sam Anderson)". இத எப்படியோ கண்டிபுடிக்குற விஜய் அவர நேர்ல கூட்டிகிட்டு வர விஷயம் தெரிஞ்சிடுது.அப்புறம் ரெண்டு பேரும் சொல்லிக்காம காதலிக்கிறாங்க.விஜயோட "தமிழ் பசங்க " டீம் போட்டியில ஜெயிக்க கூடாதுன்னு எதிரி டீம் திட்டம் போட அமலா பால் கால் ஒடஞ்சிடுது.எப்படியாவது ஜெயிக்கணும்னு நம்ம விஜய் அந்த ஒத்த காலோடையே ஆட வச்சி ஜெயிச்சிடுறாங்க.ரெண்டு பெரும் காதலிக்கிறோம்னு சொல்லிடுறாங்க.
Thalaivaa Romance

உண்மையா அந்த சீன் ரொம்ப நல்லா இருக்கும்.


ஆனா டைரக்டர் கு அமலா பால் மேல என்ன கோபமோ அவளோ சுமாரா காட்டிருக்காறு .இத அமலா பாலோட அப்பா சுரேஷ் கிட்ட சொல்ல அவரு விஜயோட அப்பாவ பாக்கனும்னு சொல்லுறாரு வேற வழியே இல்லாம அவுங்க மூணு பேரும் இந்தியாவுக்கு வராங்க.  வந்து அப்பாவ பாக்கனும்னு சொல்லுறாரு பையனாவே இருந்தாலும் அவ்வளவு சீக்கிரம் பாக்க முடியுமா அதுக்கு அவ்வளோ சுத்து சுத்தி ஒரு வழியா பாத்துடுராறு நம்ம ஹீரோ.ஏன்பா இப்படின்னு ஹீரோ கேக்க அப்பா "இது ஒரு வழி பாத,இங்க கத்திய எடுத்துட்டா ஒன்னு காக்கும் இல்ல அழிக்கும் ".அதுக்குள்ள ஹீரோயின் அப்பா கோவிச்சுகிட்டு திரும்ப ஊருக்கு போறன்னு கெளம்புறாரு  அவர சமாதானம் பண்ண சத்யராஜ் நேர்ல வர ஒரு மிகப்பெரிய திருப்பம் கதைல வருது,அது என்னன்னா அமலா பால் மற்றும் சுரேஷ் ரெண்டு பேரும் போலீஸ்(CB CID).அவுங்க சத்யராஜ கைது பண்ணி கூட்டிட்டு போறப்போ வில்லன் குண்டு வச்சு அப்பா சத்யராஜ கொன்னுடுராறு.

வில்லன் யாருன்னா விஜய் அம்மாவ கொன்ன வில்லன சத்யராஜ் கொன்னுருப்பாறு அவரோட பையன்.எல்லாம் பாத்த கத தான்.
அவ்வளவு தான் INTERVAL  வந்துடுது.இதுக்கு இடைல சுரேஷ் ஒரு ரெஸ்டாரென்ட்(Restaurant)  ஆரம்பிக்குராறு அங்க கொஞ்சம் கலாட்டா எதுக்குனே தெரியாம இதெல்லாம்.படிக்குறப்பவே கண்ண கட்டுதுல்ல ,எனக்கும் தான்.

AFTER INTERVAL
அப்பா சத்யராஜ் போனதுக்கு அப்புறம் வில்லன்கள் அட்டகாசம் ஆரம்பிக்குது எங்கள யாரு காப்பதுவாங்கன்னு மக்கள்லாம் கேக்க நான் இருக்கன்னு சொல்லுறாரு விஜய்.ஆனா அதுக்கு அவரோட சித்தப்பா பொன்வண்ணன் ஒத்துக்க மாட்டுறார்(இவரு யாருன்னா சத்யராஜ் தான் எங்கள காப்பத்தனும்னு சொல்லி சத்யராஜ் க்கு தாதா பதவி வாங்கி கொடுத்தவரு).விஜய் திரும்ப போகலாம்னு நெனைக்குறப்போ எதிர் பாராத விதமா அவரும் கத்திய எடுத்துடுறாரு,அப்பா பேச்ச மீறாத பையனாச்சே கத்திய போடாம அந்த மக்களுக்கெல்லாம் தலைவா ஆகிடுராறு.

அதுக்கப்புறம் என்ன நடக்கும்னு பழைய டான் படம்லாம் பாத்தவங்களுக்கு நல்லா தெரியும் தெரியாட்டி சொல்லுறன் அதுவரைக்கும் விஸ்வா அப்படின்னு இருந்த விஜய் "விஷ்வா பாய்" அப்படின்னு மக்களால அன்போட அழைக்கப் படுறாரு(எங்கயோ பாத்தா மாதிரி இருக்கா நம்ம பாட்ஷா பாய் தான்) அப்புறம் அப்படி இப்படின்னு வில்லன கொன்னுட்டு படத்த முடிச்சிடுறாங்க.என்னால அத எழுத கூட முடியல அவ்வளோ பெருசு.

தமிழ் பசங்க பாட்டு டான்ஸ் சூப்பர்.அவ்வளவு தான் மத்தபடி எந்த பாட்டும் கேக்குராப் போல இல்ல.அதுல விஜய் "டான்" ஆனதுக்கு அப்புறம் ஒரு பாட்டு வரும் அதோட தீம் "ஜோதா அக்பர்(JOTHA AKBAR)" படம் பாத்தவங்களுக்கு நல்லா தெரியும் அப்படி ஒரு காப்பி சந்தேகம்னா பாத்துக்குங்க
                                 

ரெண்டாவது ஹீரோயின் வரப்போ ஒரு சீன் வரும் அது இந்திரா படம் பாத்தவங்களுக்கு புரியும் அதுல அரவிந்த் சாமி ராதாரவி ஊர் காரங்கள கூட்டிகிட்டு வருவாரு நாசர் ஊருக்கு அப்போ எல்லாரும் யோசிப்பாங்க அப்போ ஒரு சின்ன பையன் தான் கூட்டிக்கிட்டு போவான் முதல்ல அத அப்படியே காப்பி அடிச்சு ஒரு சீன்.அந்த சீன் வேணும்னா யூ-டியூப் ல பாத்துக்குங்க.

இதுல ரெண்டு ஹீரோயின் எதுக்கு? அமலா பாலுக்கே சரியா வேல இல்ல அப்புறம் இன்னொரு ஹீரோயின் சும்மா காட்டிட்டு அவரையும் கொன்னுடுறாங்க .சந்தானம் சும்மா முதல் பாதியில காட்டிட்டு ரெண்டாவது பாதில டம்மி ஆக்கிட்டாங்க .டைரக்டர் க்கு ரெண்டாவது பாதில என்னாச்சுன்னு தெரியல விஜய்க்கு ஒரே டிரஸ் கொடுத்து முடிச்சிட்டாரு.கடைசியா ஒரு சீன் வரும் பாருங்க விஜய் அப்பாவோட ஜிப்பாவ மாட்டிகிட்டு அவரோட சால்வைய போட்டுக்கிட்டு செம சீன்(என்ன கொடும சார் இது).
Thalaivaa


இப்படி பல படத்துலந்து கொஞ்சம் கொஞ்சமா சுட்டு ரெடி பண்ணுன படம் தான்.நம்ம டைரக்டர் முதல் படத்துலையே டைட்டானிக் குலந்து சுட்டாரு,இதுல நம்ம பழைய தமிழ் சினிமாலந்து சுட்டுருக்குராறு. இதுல எந்த சீன பாத்தாலும் எங்கயோ பாத்த மாதிரியே இருக்கும் அது தான் இந்த படத்தோட பெரிய சிறப்பே.இந்த படத்துக்கு எதுக்கு தடை விதிச்சாங்கன்னே தெரியல.காவலன் துவங்கி துப்பாக்கி வரைக்கும் ஹிட் கொடுத்த விஜய் அப்படின்னு நெனச்சிகிட்டு போனா நிச்சயம் அவுங்களுக்கு


தலைவா சரி "TIME TO LEAD" எதுக்கு கதைப்படி விஜய் தாதா தான.அப்படின்னா நாட்ட தாதாக்கள் தான் ஆளனும்னு சொல்லி காட்டுறாங்களோ!!!
தலைவா-ஒரு பார்வை தலைவா-ஒரு பார்வை Reviewed by Unknown on Tuesday, August 20, 2013 Rating: 5

No comments:

Powered by Blogger.