இலக்கணமில்லா கவிதை

Friendship quotes
Friendship

மிகப்பெரிய யுத்தத்தையும்
சிறு புன்னகையில் வீழ்த்திவிடும் –மாவீரன்.

நட்பின் இலக்கணம் எதுவென்று
எவனும் அறியான் ,இவனும் அறியேன்,

என்னுடையதெல்லாம் உனக்கும் உரியதே என்று கூறினேன்,
அப்படியெனில் நீயும் நானும் சகோதரான?
இல்லை !

நீ என்னை பிரிந்து செல்கையில் உலகின் எல்லா
மகிழ்ச்சியும் என்னைவிட்டு செல்வதாய் உணர்கிறேன்,
அப்படியெனில் நாம் காதலர்களோ?
நிச்சயம் இல்லை!

நான் தவறிழைக்கும் பொழுதெல்லாம் என்
தவறை நீயும் சுட்டிக்காட்டி வழிகாட்டினாய்,
அப்படியெனில் நீ என் தந்தையோ ?
அதுவும் இல்லை!

நான் சோகமென அருகே அமர்ந்தால் உன்
அன்பின் மொழியால் என் சோகம் நீக்கினாய்,
அப்படியெனில் நீ என் அன்னையா ?
நிச்சயம் இல்லை!

பின் யார்தான் நீ?

உனக்கும் எனக்கும் என்ன உறவு?

உன்னுடன் நெருங்கிய தொடர்பும் இல்லை!

உன்னை பல நாள் சந்திக்கவும் இல்லை!

பின் எப்படி என்னுள் ஒருவனானாய் ?

இந்த உறவின் பெயரென்ன?

பலரிடம் கேட்டேன் எவரும் சரியாய் அறியிலார்?

கனவினில் ஒரு நாள் கடவுளும் வந்தார்
அவரிடம் கேட்டேன் நீ யாரென்று ? இது என்ன உறவென்று?
அவர் கூறினார் நீ என் தோழன் என்று, இது தான் நட்பென்று !

மீண்டும் கேட்டேன் நட்பின் இலக்கணம் என்ன என்று ?
கூறினார் இலக்கணமில்லா உறவுதான் நட்பென்று - கூறி
அவரும் மறைந்தார் , நானும் விழித்தேன் எதிரே நீ நின்றாய்,

என்றும் நாம் நண்பர்களாக.. :-)
இலக்கணமில்லா கவிதை இலக்கணமில்லா கவிதை Reviewed by Unknown on Thursday, July 17, 2014 Rating: 5

No comments:

Powered by Blogger.