காசு பணம் வந்தா தானா வருவாளுங்கடா..

பெண் என்பவள் யார்? பெண்ணியம் பற்றி பேசும் நம்மில் எத்தனை பேருக்கு இதற்க்கான விடை தெரியும்?. பெண் சுதந்திரத்தை பற்றி பேசிக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் நம்மிடையே பெண்களை பற்றிய தவறான கருத்து பரவிக்கொண்டிருக்கிறது. இதற்க்கு யாரையும் குற்றம் கூறி கொண்டிருக்க முடியாது காரணம் இது இப்பொழுது துவங்கியது அல்ல, பல நூற்றாண்டுகளாக விதைக்கப்பட்ட ஒன்று. 

இன்று சிறு வயது பிள்ளைகள் முதல்கொண்டு பெரிய ஆண்கள் வரை  வழக்கத்தில் கூறுவது "காசு பணம் வந்துட்டுன்னா பொண்ணுங்கல்லாம் தானா பின்னாடி வருவாங்க ".இந்த கருத்து எப்படி பரவியது என்று புரியவில்லை. ஒரு ஆண் அவன் வாழ்நாளில் சராசரியாக எத்தனை பெண்களை சந்திதிருப்பான் ,அவர்களில் எத்தனை பேருடன் அவன் பழகியிருப்பான் ,அவர்களில் எத்தனை பேரை பற்றி அவனுக்கு முழுவதும் தெரிந்திருக்கும்.  ஒரு சில பெண்களை பற்றி மட்டும் தெரிந்து கொண்டு ஒட்டு மொத்த பெண்களை பற்றியும் தவறாக கூறுவது எந்த வழியில் நியாயம் என்று புரியவில்லை.இந்த தவறான கருத்தையும் நியாயப்படுத்த ஒரு கூட்டமே இருக்கிறது.

யார் பத்தினி என்றவுடன் அனைவரும் கூறும் பெயர் கண்ணகி ,ஏன் அவள் மட்டும் தான் பத்தினியா ,ஏன் அந்த காலத்தில் மட்டும் தான் பத்தினிகள் இருந்தார்களா, இப்பொழுது யாரும் இல்லையா.  இந்த தவறான கருத்து வளர ஆண் மட்டும் காரணம் அல்ல ,பெண்களும் தான் . தன் குழந்தை தவறாக பேசும் பொது தவறை சுட்டி காட்டாமல் விடுவது காரணம் தன குழந்தை தன்னை கூறவில்லை ,பிறர் வீட்டு பெண்ணை தானே கூறுகிறான் என்பதால் . அதன் விளைவு இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் பெண்கள் மீதான வன்முறைகள்.

பெண் சுதந்திரம் வேண்டும் ,பெண் உரிமை வேண்டும் என்று போராடுவதில் எந்த பலனும் இல்லை காரணம் அடித்தளம் சரியாக அமையாத எந்த கட்டிடமும் முழுமை பெறாது அது போல குழந்தைகளுக்கு சரியான பாதையை அமைத்து கொடுக்காமல் இங்கு எதையும் மாற்றி பலன் இல்லை.இன்றைய கல்வி முறை கூட மறைமுகமாக பெண்களை அடிமை படுத்தி கொண்டுதான் இருக்கிறது.கல்வி போதிக்கும் இடத்தில் மாற்றம் கொண்டு வந்து என்ன செய்வது ,போதிக்கும் கல்வியில் மாற்றம் இல்லாத போது.அது புரியாமல் தேர்வில்  மட்டும் முதலாய் வந்து என்ன செய்வது !

"தாயை தெய்வமாக நினைக்கும் இந்நாட்டில் தான் பிறர் வீட்டு பெண்ணை தாசியாக பார்க்கும் மனோபாவம் வளர்ந்து கிடக்கிறது " இந்த கருத்தை மாற்றாமல் நாட்டில் இயற்றப்படும் எந்த ஒரு சட்டமும் "ஏட்டில் மட்டுமே இருக்க முடியுமே  தவிர ,மாற்றங்களை உருவாக்க முடியாது ".  ""மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது அந்த மாற்றம் வரும் வரை காத்திருப்பதை தவிர வேறு வழி இங்கில்லை".

"பெண்ணியம் போற்றுவோம் கண்ணியம் காப்போம் "
காசு பணம் வந்தா தானா வருவாளுங்கடா..  காசு பணம் வந்தா தானா வருவாளுங்கடா.. Reviewed by Unknown on Tuesday, June 11, 2013 Rating: 5

No comments:

Powered by Blogger.