சுண்டல்!!!!

அது ஒரு ஞாயிற்று கிழமை நானும் நண்பனும் சந்தித்து நெடுநாட்களாகியதால் சந்திக்க முடிவு செய்து கடற்கரைக்கு சென்றோம்.கடற்க்கரை கேட்கவே வேண்டாம்,அன்று வார விடுமுறை வேறு மக்கள் கூட்டம் நேரமாக நேரமாக அதிகரித்துக் கொண்டே சென்றது.பலதரப்பட்ட உணவுப் பொருட்களின் விற்ப்பனையும் படு மும்முறமாக நடந்து கொண்டிருந்தது.

Sundal Boys
Courtesy: @Jhon Jeevinth(flickr)


நாங்களும் கடற்கரையை முடிந்த அளவு சுற்றிவிட்டு ஒரு இடத்தில் சென்று அமர்ந்தோம்.நாங்கள் எப்பொழுதும் போல எங்களின் சொந்த கதைகளை விவாதித்துக் கொண்டிருந்தோம்.அப்பொழுது ஒரு பாட்டி எங்களிடம்
"அய்யா!! பசிக்குதுய்யா"
"சாப்பிடவே இல்லையா! , ரெண்டு  ரூபா இருந்தா கொடுங்கய்யா.."
 அவரும் என்னிடம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்க நாங்கள் எதையும் காதில் வாங்காமல் தொடர்ந்து எங்கள் கதையை பேசிக்கொண்டிருந்தோம் சிறிது நேரம் அந்த பாட்டி கேட்டுவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தால்.அவர் சென்ற பின் என் நண்பன் கூறினான் "உதவி செய்வது நல்லது தான்,நம்மை சுற்றி நமக்கு தெரிந்து எத்தனையோ பேர் கஷ்ட்டப்படுபவர்கள் இருப்பார்கள் அவர்களுக்கு உதவி செய்வது நல்லது, இது போல கேட்பவர்களுக்கு செய்யாவிட்டால் எதுவும் இல்லை " அவன் கூறியது சரி தான்,  இவர்களுக்கு உதவி செய்தாலும் பிறகும் வந்து இதையே தான் செய்ய போகிறார்கள் பிறகு எதற்கு உதவ வேண்டும்.

சிறிது நேரம் கழித்து ஒரு சிறுவன் கையில் சுண்டல் வாளியுடன் வந்துகொண்டிருந்தான்,எங்களை கவனித்தவன் எங்களிடம் வந்து
"அண்ணா..சுண்டல் வங்கிக்குங்கன்னா.."
"இல்லடா தம்பி ..இப்போ தான் சாப்பிட்டோம்,எங்களுக்கு வேணாம்"
"என்னன்னா,உங்கள பாத்தா அஜித் போல இருக்கு வங்கிக்குங்கன்னா"
"அப்படியா, பரவாயில்ல வேணாம் டா..நீ வேரயாரயசும் பாரு.."
"அண்ணா..உங்கள பாத்தா சூர்யா போல இருக்கீங்க வாங்கிக்க மாட்டுறீங்க.."
"இப்போதான் அஜித்னு சொன்ன அதுக்குள்ளே சூர்யாவா,நீ எங்ககிட்ட எவ்வளோ பேசுனாலும் வாங்க மாட்டோம்,நீ கெளம்பு.."
"என்னண்ணா? ஸ்கூலுக்கு போயிட்டு வந்து, விக்கிறதுக்கு வந்துருக்கன், உன் தம்பின்னா வாங்க மாட்டியாண்ணா? "
"இப்போ தாண்டா தம்பி சாப்பிட்டோம்,நீ வேற யார்கிட்டயாச்சும் வித்து பாரு"

அவனும் எங்களிடம் எவ்வளவோ பேசியும் நாங்கள் வாங்குவதாய் இல்லை,அவனும் வரிசையாக பொய்களை அடுக்கி பார்த்தான் எதுவும் நடக்கவில்லை.கடைசியாக அந்த இடத்தை விட்டு சென்றான். அவன் சென்ற பிறகு தான் தோன்றியது கொஞ்சம் முன்னாள் நான் வேறு இடத்தில் சுண்டல் வாங்கி சாப்பிடாமல் இருந்திருந்தால் அந்த சிறுவனிடம் வாங்கியிருக்கலாம்.அவனுக்கும் ஒரு உதவி செய்ததை போல இருந்திருக்கும்.

சிறிது நேரம் கழித்து நாங்கள் இருவரும் அங்கிருந்து கெளம்பினோம் சிறிது தூரம் வந்த பின் திரும்பி கடற்கரையை  பார்த்தேன் நிறைய சிறுவர்கள் கையில் வாளியுடன்....அண்ணா சுண்டல் வாங்கிக்குங்க ...அக்கா சுண்டல் வாங்கிக்குங்க ....


சுண்டல்!!!! சுண்டல்!!!! Reviewed by Unknown on Monday, July 22, 2013 Rating: 5

No comments:

Powered by Blogger.