ஹாசினி பிரியா


பரப்பான அலுவலகம்,மாத கணக்குகளை சரிபார்த்து சமர்ப்பிக்க அனைவரும் விறுவிறுப்பாக வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.அங்கு புதியதாக ஐந்து பேர் வேலைக்கு சேர்ந்தனர்.அதில் மூன்று ஆண்கள் இரண்டு பெண்கள்.அந்த ஐந்து பேரில் இரண்டு ஆண் ஒரு பெண் இவர்களை ஒரு டீமிலும்,மற்றுமொரு ஆண் மற்றும் பெண்ணை இன்னொரு டீமிலும் சேர்த்தனர்.

மறுநாள் காலை அவர்கள் இருவர் மட்டும் அந்த டீமில் புதியவர்கள் என்பதால் ஒருவரை ஒருவர் அறிமுக படுத்திக்கொண்டார்கள்.

"ஹாய், ஐ யம் பிரியா"
"ஹாய், மை நேம் ராகுல்"

அதன் பின் அவர்கள் அவரவர் வேலையை பார்க்க துவங்கினார்கள்,நாட்கள் செல்ல செல்ல அவர்கள் இருவரும் நல்லநண்பர்களாக பழக துவங்கினார்கள்,இருவரும் பெரும்பாலும் சேர்ந்தே தான் வருவதும் செல்வதும் வழக்கம்.இருவரையும் காதலர்கள் என்றே அந்த அலுவலகம் நம்பியது.அது அவர்களுக்கு தெரிந்தும் அவர்கள் அதை கண்டு கொள்ளவில்லை.

இரண்டு மாதங்களுக்கு பிறகு புதியதாய் ஒரு பெண் அலுவலகத்தில் சேர்ந்தால் .மிகவும் அழகான பெண் .அவள் யாரிடமும் சரியாக பேசுவது கிடையாது,அவள் அணிந்து வரும் ஆடைகளிலும்,அவளின் பழக்க வழக்கங்களிலும் அவளின் குடும்ப வசதிகள் பிரதிபலித்தது .அவளை பற்றிய எந்த தகவலும் யாருக்கும் தெரியவில்லை.அவளும் யாரிடமும் சொல்லவில்லை.

அவள் பெயரை தெரிந்து கொள்ள ராகுலுக்கு ஆர்வம் அதிகமாகிக் கொண்டே சென்றது ,ஒரு நாள்அனைவரும் மாலை வீட்டிற்கு சென்று விட அவளும் ராகுலும் மட்டும் இருந்தனர்.அதுவரை பரப்பாக இருந்த அலுவலகம் அப்பொழுது வெறிச்சோடி அமைதியாக இருந்தது,கம்ப்யூட்டரில் பட்டன் தட்டும் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது.

சிறிது நேரத்தில் அதுவும் நின்றது,அதுவரை வேளையில் மட்டும் கவனத்தை செலுத்திக் கொண்டிருந்தவள் அப்பொழுது தான் யாரும் இல்லை என்பதை உணர்ந்தால்,கடைசியாக அவன் செல்லும் பொழுது அவளை திரும்பி பார்த்தான் .அவளும் அவனை பார்த்தால் அவள் முகத்தில் ஒரு பதற்றம் தெரிந்தது .வாசல் வரை சென்றவன் மீண்டும் அவன் இடத்திற்கே திரும்பினான்.சிறிது நேரத்தில் அவள் வேலைகளை முடித்து விட்டு கிளம்பினால்.அப்பொழுது அவனும் கிளம்ப முதல் முறையாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டால்.

"ஹாய்...ஐ ம் ஹாசினி,யுவர் நேம்? "
"ஐ ம் ராகுல் "
"வேர் ஆர் யு ஃப்ரம் "
"வடபழனி அண்ட் யு"
"தேனாம்பேட்,ஓகே ஃபாய் ராகுல்,டைம் டூ லேட்,வீ வில் மீட் டுமாரோ "
"ஓகே..ஃபாய்"
"தேங்க்ஸ் ராகுல்.."

மறுநாள் காலை ராகுலுக்கு பக்கத்து சீட்டில் வந்து அமர்ந்து கொண்டாள், அலுவலகத்தில் இருந்த அனைவருக்கும் ஒரே ஆச்சர்யம் ,அதுவரை யாரிடமும் பேசாதவள்அவனிடம் பேசுகிறாளே என்று.நாட்கள் செல்ல செல்ல இருவரும் நன்றாக பழக துவங்கினார்கள்,நல்ல நண்பர்களாக மாறினார்கள்.அன்று வரை ப்ரியாவுடன் இணைத்து கிசுகிசுத்தவர்கள் ஹாசினியையும் சேர்த்துக் கொண்டார்கள்.

அன்று ரக்க்ஷா பந்தன் ஹாசினி மற்றும் பிரியா இருவரும் அங்கு வேலை பார்ப்பவர்களுக்கு ராக்கி கட்டிக் கொண்டிருந்தனர், அங்கிருந்தவர்களின் பெரும்பாலனோர் முகத்தில் அன்று தான் கவலை குடியேறியது.சிறிது நேரத்திற்கு பின் ராகுல் வந்தான்.இருவரும் கையில் ராக்கியுடன் அவனை நோக்கி சென்றார்கள்..

"ஹாய்,ப்ரியா ..ஹாசினி..என்ன நடக்குது இங்க.."
"இன்னைக்கு என்னன்னு தெரியாதா"
"நோ ஐடியா"
"இன்னைக்கு ரக்க்ஷா பந்தன்,அதான் நானும் ஹாசினியும் எல்லாருக்கும் ராக்கி கட்டிட்டு இருக்கோம்,நீ மட்டும் தான் மீதி கைய நீட்டு"
"அதுகென்ன பிரியா,கட்டிக்கோ"
"ஹாசினி வா! நீயும் கட்டு"
இருவரும் ராகுலுக்கு ராக்கி கட்ட செல்வதை பார்த்து அலுவலகத்தில் சிலர் சிரிப்புடனும்,சிலர் ஆச்சர்யத்துடனும் பார்த்துக் கொண்டிருந்தனர்.
ப்ரியா ராகுலுக்கு ராக்கி கட்டிவிட்டு இன்னொரு கையையும் நீட்ட சொன்னால் ராகுல் மிகுந்த யோசனைக்கு பின் கையை நீட்டினான்...
"ஹாசினி,என்ன யோசிக்கிற கட்டி விடு ராகுலுக்கு..."
கட்டுவதற்கு வந்தவள் சிறிது தயங்கி பின் மெல்லிய புன்னகையுடன் அந்த இடத்திலிருந்து நகர்ந்து அவள் இடத்திற்கு சென்றால்,பிரியா அவன் தோளில் தட்டினால்,ராகுலும் புன்னகைத்த படியே அவன் இடத்திற்கு சென்றான்.

அங்கிருந்து இதை கண்ட அனைவரின் முகத்திலும் ஈ ஆடவில்லை!!!!!!!!!!
ஹாசினி பிரியா ஹாசினி பிரியா Reviewed by Unknown on Thursday, July 25, 2013 Rating: 5

No comments:

Powered by Blogger.