நாம்


Join Hands
Courtesy:Mahivi.net

பல அடுக்கு கட்டிடங்கள் நிறைந்த ஒரு தெரு.சில ஆண்டுகளுக்கு முன் அங்கிருந்த மரங்களெல்லாம் வெட்டப்பட்டு இப்பொழுது கட்டிடங்கள் கட்டப்பட்டுவிட்டன,ஒவ்வொரு கட்டிடங்களை அழகுபடுத்தவும் அழகு செடிகள்(Croton) வளர்க்கப்படுகின்றன.அந்த தெருக்களில் சிறு வயதில் ஓடி ஆடி விளையாடி தங்கியிருந்த சிறுவர்கள் சில ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அந்த இடத்திற்கு வருகிறார்கள்.அங்கு ஒரு மரம் கூட இல்லாமல் குப்பைகள் நிறைந்து இருக்கின்றது.ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணுகிறார்கள்.

 ஒரு நாள் அந்த மாணவர்கள் அனைவரும் இணைந்து அந்த குப்பைகளை அகற்றி சுத்தம் செய்து அவர்களால் முடிந்த அளவு மரங்களை நட்டு விட்டு செல்கின்றனர்.தினமும் தண்ணீர் ஊற்றி வளர்க்கின்றனர்.இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அவர்கள் நட்ட மரங்கள் அனைத்தும் வளர்ந்து மிகுந்த அமைதியான சூழலாக அந்த பகுதியையே மாற்றுகிறது.நகரின் சிறப்பு மிக்க பகுதியாக அரசு பாராட்டி அங்கு வசிப்பர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கி பாராட்டுகிறது.இவ்வளவு செய்த அந்த மாணவர்களை யாரும் கண்டுகொள்ளவில்லை.அதுவரை வேடிக்கை மட்டுமே பார்த்து கொண்டிருந்த அவர்களும் மகிழ்ச்சியுடன் அதை பெற்றுகொண்டனர்.

இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம் அந்த மாணவர்கள் எதிர்பார்த்தது அவர்களின் பாராட்டையோ,அரசின் சலுகைகளையோ அல்ல அவர்கள் வாழ்ந்த அவர்கள் நேசித்த பகுதி மீண்டும் பழைய நிலைமையை அடைய வேண்டும் என்பது அது நடந்து விட்டது அவர்கள் சிறு வயதில் எப்படி மரங்கள் நிறைந்து இருந்ததோ அதே போல மாற்ற வேண்டும் என்பது.அவர்கள் எதிர் பார்த்தது என்னமோ இன்று நடந்து விட்டது.இது ஒரு கற்பனை கதையே.

இங்கு பெரும்பாலும் நாம் செய்யும் எந்த ஒரு செயலிலும் எதிர்பார்ப்பு என்ற ஒன்ற நிச்சயம் உள்ளது.இங்கு நாம் செய்யும் தர்மம் கூட பின்னால் நமக்கு உதவும் என்ற நம்பிக்கையில் தான் அதையும் செய்கிறோம்.அந்த மாணவர்கள் நம்மால் என்ன முடியும் என்று நினைத்திருந்தால் அவர்களால் அவர்கள் இழந்த அந்த இயற்கை அழகை அவர்களால் திருப்பி கொடுத்திருக்க இயலாது.
அந்த நாம் என்ற இரெண்டுழுத்துக்கு உலகையே அடிமையாக்கும் சக்தி உண்டு ஆனால் நாம் யாரும் அந்த நாம் என்ற வார்த்தையை எதாவது எதிர்பார்ப்புக்கு மட்டுமே பயன்படுத்தி கொள்கிறோம்.

நான் ஒருவன் தவறு செய்வதால் எல்லாரும் தவறு செய்வார்களா? , 
நான் ஒரு மரத்தை வெட்டினால் எல்லா மரங்களும் அழிய போகிறதா என்ன?,
நான் ஒருவன் குப்பையை கொட்டுவதால் ஊரே குப்பையாக போகிறதா என்ன?,
நான் ஒருவன் லஞ்சம் கொடுப்பதால்(அ) வாங்குவதால் ஊழல் பெருக போகிறதா என்ன? 

நான் மட்டும் தானே ஒரு மரம் வெட்டுகிறேன் என்று நினைத்தே பெரும்பாலான காடுகளை அழித்து விட்டோம்.நான் மட்டும் தானே குப்பை போடுகிறேன் என்று எண்ணியே ஊரையே குப்பை தொட்டியாக்கிவிட்டோம்.செய்யும் எல்லா தவறுகளையும் நாம் செய்து விட்டு அரசாங்கமே சரியில்லை,எதுவும் சரியில்லை என்று குறை கூறுகிறோம் ஆனால் அந்த அரசாங்கத்தை அங்கு வைத்ததே நாம் தான் என்பதை மறந்து விடுகிறோம்.

மழை வரவில்லை என்று குறை கூறி விட்டு அந்த மரத்தையே வெட்டி யாகம் வளர்ப்போம்,காய்கறி விலை உயர்கிறது என்று கூறி விட்டு விளைநிலங்களை எல்லாம் கல் கட்டிடங்களாக்குவோம்.நமக்கு வேலை சீக்கிரம் முடிவதற்கு லஞ்சம் கொடுத்துவிட்டு லஞ்சம் வாங்குறாங்கன்னு குறை கூறுவோம்.தேர்தலின் பொழுது ஓட்டு போட செல்ல மாட்டோம் ஆனால் அரசாங்கமே சரியில்லை என்று குறை கூறுவோம்.

இது மட்டும் தான் நாம் செய்வோம்.இப்படி நான் நான் என்று செய்யும் தவறுகள் ஒரு நாள் நம்மை நோக்கியே திரும்பும்,அன்றும் கூட நாம் பிறர் மீது பழியை போட்டு நம் தவறை மறைக்க பார்ப்போமே தவிர தவறை திருத்தி கொள்ளவே மாட்டோம். இங்கு நான் நான் நான் என்று ஒவ்வொருவரும் செய்த ஒவ்வொரு தவறும் இன்று நம்மையே வீழ்த்தி கொண்டிருக்கிறது.

நாம்(நான்+நான்) இங்கு நாம் என்பதே நான் உட்பட அனைவரும் சேர்ந்ததே என்பதை நாம் உணர்வதே கிடையாது.நிச்சயம் நான் என்ற வார்த்தை நாமாக மாறும் அன்று நாம் செய்த தவறுகள் அனைத்தும் நம்மால் சரி செய்ய முடியாதபடி வளர்ந்து நிற்கும்.காலந்தாழ்த்தி உணரும் எந்த ஒரு தவறுக்கும் பலன் கிடையாது.ஏற்க்கனவே எல்லாம் நம் கையை விட்டு சென்று சென்று கொண்டிருக்கிறது.இனியும் நாம் நம் தவறை உணரா விட்டால்...

"கண் கெட்ட பின் சூரிய நமஸ்க்காரம் எதற்கு"


நாம் நாம் Reviewed by Unknown on Friday, July 12, 2013 Rating: 5

No comments:

Powered by Blogger.