கல்லூரி நாட்களின் சுகமான நினைவுகள்...




College First Day

பள்ளிகள் என்னும் சிறிய உலகத்திலிருந்து பற்பல கனவுகளை சுமந்துகொண்டு கல்லூரி என்னும் புதிய உலகத்திற்குள் நுழைந்தான்.
கல்லூரி முதல் நாள் அறிமுகமில்லா உலகம் எந்த ஒரு விதி முறையும் தெரியாது.திரைப்படங்களில் மட்டுமே பார்த்து ரசித்த ராகிங் காட்சிகள் ,அறிமுகமில்லா தோழர்கள்  என்று எல்லாமே புதிது.மனதிற்குள் ஒரு பதற்றம் என்ன நடக்க போகிறதென்று.வகுப்புக்குள் நுழைந்தான் ஒரு சிலர் மட்டும் இருக்க தன்னை அறிமுக படுத்திகொண்டு ஒரு பெஞ்சில் சென்று அமர்ந்தான்.நேரம் செல்ல செல்ல அனைவரும் வர மனதிற்குள் சிறு பதற்றம் அதை வெளிக்காட்டாமல் மெல்லிய புன்னகையை காட்டி அனைவரிடத்திலும் தன்னை அறிமுக படுத்திக்கொள்கிறான்.முதல் நாள் சின்ன சின்ன கலாட்டக்களுடன் முடிகிறது.

நாட்கள் கடந்தோட பல நட்பு வட்டாரங்கள் உருவாகின்றன, நாட்டில் என்னதான் மதம் ,ஜாதி என்று பிரிந்து கிடந்தாலும் கல்லூரி என்னும் கூட்டில் அனைவருமே ஓரினமே.நட்பின் எல்லை விரிவடைந்து நண்பனின் குடும்பத்தை தன் குடும்பமாக எண்ணி உறவுமுறைகளும் உருவாகின்றது.

அனைவரின் வாழ்க்கையிலும் நட்பு என்ற உறவை தவிர்க்க முடியாதோ அதன்
love in college
உடன் பிறப்பு காதலையும் தவிர்க்க முடியாது.அவன் வாழ்க்கையில் காதலும் துளிர் விட  துவங்குகிறது.அவளை பார்த்தவுடன் கனவுகள் விரிவடைய அது தான் காதலா என்று  அறியாமலே மனதிற்குள் அவளின் எண்ணம்  குடியேற தினமும் அவளுக்காக கத்துகிடக்க துவங்குகிறது மனது.

friends group study
நண்பர்களுடன் சிறுசிறு கலாட்டக்கள் என்று கல்லூரி நாட்களின் சுகமான
நினைவுகள் தொடர்ந்து தொடர்ந்து கொண்டே செல்கிறது. இந்த சுகமான நினைவுகளுகிடையே கல்லூரி தேர்வுகள் ,நண்பர்களுடன் குரூப் ஸ்டெடி என்று பல மறக்க முடியாத நினைவுகள் பொக்கிஷமாக தொடர்ந்து கொண்டே செல்கிறது.இந்த சுகமான கலாட்டாக்களுக்கிடையே ஆண்டுகள் ஓடியது தெரியாமல் கடந்தோடி விட்டது.

கல்லூரி முடிய ஒரு சில நாட்களே மனதிற்குள் ஆயிரம் ஆயிரம் எண்ணங்கள் கரைபுரண்டோட கடைசி நாள்,அதுவரை கண்ணிற்கு எதிரியாக தெரிந்த ஆசிரியர்கள் கூட அன்று நல்ல நண்பர்களாக தெரிகின்றனர்.அன்று வரை பேசாமல் பிரிந்திருந்த நண்பர்களும் கூட தங்கள் பிரிவை உணர்ந்து தங்கள் உணர்சிகளை பகிர்ந்து கொள்கின்றனர் .கடைசி சில மணி நேரங்கள் இன்னும் நீளக்கூடாதா என்று எண்ணிக்கொண்டே மணித்துளிகள் கரைய, அனைவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டு கண்ணில் நீர் துளிகளுடன் விடை பெறுகின்றனர்.என்று மீண்டும் சிந்திப்போம் என்று கூட தெரியாமல் பிரிகின்றனர்.

அவனும் தான் ,தன் சொல்லாத காதலையும் தன் கல்லூரியின் நினைவுகளாக தன்னுடன் சுமந்துகொண்டு விடைபெறுகிறான்.

அழகிய கல்லூரி நாட்கள் சிறு சிறு சண்டைகள்,தோழிகளுடன் கலாட்டா ,சொல்லிவிட்ட காதல்கள் ,சொல்ல நினைத்த காதல்கள் என அனைத்தையும் அங்குள்ள மரங்களும் ,பெஞ்சுகளும் தன் கடந்த கால நினைவுகளாக சுமந்து கொண்டு நிற்க .கல்லூரி என்னும் புத்தகம் மட்டும் தன்னை தேடி வரும் புது வாசகர்களை கவர்ந்து கொண்டே இருக்கிறது.
"ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மறக்க முடியாத தருணங்கள் "


கல்லூரி நாட்களின் சுகமான நினைவுகள்... கல்லூரி நாட்களின் சுகமான நினைவுகள்... Reviewed by Unknown on Saturday, June 22, 2013 Rating: 5

No comments:

Powered by Blogger.