என் 4 மணி நேரம்

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மறக்க முடியாத சில நிமிடங்கள் இருக்கும்.சில மகிழ்ச்சியான தருணங்கள் என்றும் மறக்க இயலாது.அப்படி என் மறக்க முடியாத நான்கு மணி நேரங்கள்.வாழ்க்கையின் உண்மையான மகிழ்ச்சி என்ன என்பதை கற்று கொடுத்த அந்த சில மணி நிமிடங்கள்.



என் நீண்ட நாள் ஆசை ஒரு காப்பகத்துக்கு செல்ல வேண்டும் என்பது.அது இன்று நிறைவேறியது. இன்று ஒரு குழந்தைகள் காப்பகத்துக்கு சென்றேன்.அதன் பொதுவான சொல் அனாதைகள் காப்பகம்(Orphanage-Child Home).என் வாழ்க்கையின் மறக்க முடியாத பல கேள்விகள் என்னுள் எழுப்ப பட்ட நிமிடங்கள்.

ஒரு மாறுதளுக்காக சென்ற இடம்,அங்குள்ள குழந்தைகளின் மகிழ்ச்சியான உலகம்.சென்று சிறிது நேரத்தில் ஒருவர் ஒருவராக உறவாட துவங்கி விட்டனர்.சிறு சிறு விளையாட்டுக்கள்,கள்ளமில்லா குழந்தைகளின் மழலை சிரிப்பு என்று அனைத்தும் என்னை கவர்ந்து விட்டது. அவர்களுடன் சாப்பிட்டு விட்டு,எதற்காக அங்கு சென்றோமோ அதையெல்லாம் முடித்துவிட்டு கிளம்பும்போது என்னிடம் ஒரு சிறு பையன் பேசிய சில வார்த்தைகள் இன்னும் என்னுள் கேட்டுகொண்டே இருக்கிறது.

"அண்ணா எங்க போறீங்க?"
எனக்கு என்ன சொல்வதென்று தெரியல
"நான் ஆபீஸ் போறன்."
மறுபடியும் என்னை பார்த்து 
போயிட்டு வந்துடுவிங்கள்ள?
எனக்கு இதுக்கு மேல என்ன சொல்லுறதுன்னு தெரியல சின்ன பையன் அவனுக்கு ஞாயிற்று கிழமை ஆபீஸ்லாம் லீவு அப்படின்னு கூட தெரியல.நான் சொன்னன் 
"இல்லப்பா,நான் இப்போ போயிட்டு சீக்கிரமே வந்துடுறன்னு ".
அவனுக்கு அதை கேட்டதும் ஒரு சந்தோசம்,ஆனா நான் சொல்லுறது பொய் அப்படின்னு கூட தெரியல..

அப்போ தான் எனக்கு தோனுச்சு உண்மையாவே நாமெல்லாம் ரொம்ப கொடுத்து வச்சவங்க,நமக்கு எவ்வளவு சொந்தம் அப்படிலாம் இருந்தும் நம்மில் பல  பேர் யாருடனும் ஒத்து போகாம தனிச்சு வாழ்ந்துகிட்டு இருக்குறோம்.அவர்கள் ஏங்கும் உறவுகள் அவர்களுக்கு இல்லை.நான் அந்த பையன மறுபடியும் பார்ப்பேனா என்று கூட தெரியாது.இருந்தாலும் அவனுக்குள் ஒரு சிறு நம்பிக்கை நான் திரும்ப வருவேன் என்று.

இன்றும் நம்மில் எவ்வளவோ பேர் அமைதி வேண்டும் மகிழ்ச்சி வேண்டும் என்று சுற்றி கொண்டே இருக்கிறோம்.கடவுளிடம் சென்று எனக்கு மகிழ்ச்சி கொடு என்று வேண்டுதல்  வைக்கும் நாம் உண்மையான மகிழ்ச்சி எங்கு உள்ளது என்பதை உணர்வதே கிடையாது.எங்காவது சென்று மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று என்னுபவர்கள் அவர்களின் அருகாமையில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று அங்குள்ள குழந்தைகள் மற்றும் முதியோருடன் சிறிது நேரம் கழித்து பாருங்கள் வாழ்க்கையின் உண்மையான மகிழ்ச்சி என்ன என்று புரியும்.அன்பு என்ற மூன்றெழுத்து சொல்லுக்காக எத்தனை ஜீவன்கள் ஏங்குகிறது என்று புரியும். அவர்களுக்கு பொருள் உதவி செய்ய முடியாவிட்டாலும் அவர்களுக்கு உங்களால் முடிந்ததை செய்யுங்கள்,அவர்கள் பெரும்பாலும் ஏங்குவது பாசத்திற்காக மட்டுமே.

எவ்வளவோ நேரம் நண்பர்களுடன் ஊர் சுற்றும் போதும்,செலவு செய்யும் போதும் கிடைக்காத ஒரு மகிழ்ச்சி அந்த சிறு குழந்தைகளுடன் விளையாடிய சில மணி நேரங்களில் கிடைத்தது .என் வாழ்க்கையில் இந்த 4 மணி நேரங்கள் என்றுமே மறக்க முடியாது,அந்த சிறு குழந்தையின் முகமும் தான்..
என் 4 மணி நேரம்  என் 4 மணி நேரம் Reviewed by Unknown on Sunday, July 07, 2013 Rating: 5

No comments:

Powered by Blogger.