ரமேசு....சுரேசு.....

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒரு பிறந்தநாள் என்றும் மறக்க முடியாத அனுபவமாய் இருக்கும்.என் வாழ்க்கையிலும் என்னுடைய 23வது பிறந்தநாள் என்றுமே மறக்க முடியாது.அது ஏன்னு  போக போக தெரியும்....

Never forgottable Birthday


நான் ரமேஷ்.என் ப்ரெண்டோட பெயர் சுரேஷ் .நானும் சுரேஷும் 18 வருஷமா பிரெண்ட்ஸ்.ஒவ்வொரு வருஷமும் என் பிறந்த நாளுக்கு முதல் நாள் ராத்திரி ரெண்டு பேரும் சேர்ந்து கொண்டாடுறது தான் வழக்கம்.ஆனா இந்த வருஷம் அப்படி நடக்குமா அப்படின்னு நான் நெனச்சிகிட்டு இருந்தன் ஏன்னா அவன் அவனோட சொந்த ஊருக்கு போயிருந்தான்.அது மட்டுமில்ல ஒரு மாசத்துக்கும் முன்னாடி எனக்கும் அவனுக்கும் சின்ன சண்ட வேற,அதுலந்து என்கிட்ட பேசுறது கூட இல்ல.அதனால இந்த வருஷம் வழக்கம் போல நடக்காதோன்னு ஒரு வருத்தம் இருந்துச்சு.

நானும் அவன சமாதான படுத்த எத்தனையோ தடவ போன் ,மெசேஜ்லாம் பண்ணிட்டன் எதுக்கும் ஒரு பதில் இல்ல.நாளைக்கு என் பிறந்தநாள்.முதல் நாள் மாலை அம்மா ,அப்பா ரெண்டு பேரும் வெளி ஊர் போயிட்டாங்க.நான் மட்டும் தான் வீட்டில் இருந்தன் .தனியா இருக்குறதுன்னா எனக்கு கொஞ்சம் பயம் அதனால டிவி சத்தமா வச்சி பாத்துகிட்டு இருந்தன் .ராத்திரி 10 மணி இருக்கும்.யாரோ கதவு தட்டுற சத்தம் கேட்டுச்சு..
                         "டக் டக் டக் "
                         "டக் டக் டக் " 

யாருடா அது இந்த நேரத்துலன்னு போய் கதவ திறந்தா....
எனக்கே ஆச்சர்யம் சுரேஷ் நிக்குறான்.

              "சாரி டா  ரமேஷ்,உன்கிட்ட இவ்வளோ நாள் பேசாம இருந்ததுக்கு  "

"பரவாயில்லடா சுரேஷ்,என்ன திடீர்ன்னு வந்துருக்க "

              "ஏன் உனக்கு தெரியாதா நாளைக்கு என்ன நாளுன்னு"

"நன்பேண்டா,சரி வா உள்ள போகலாம், அப்புறம் ஊர்லாம் எப்படி இருக்கு "

             "ஊருக்கு என்னடா கொறச்சல்,நான் போனதுலந்து நல்ல மழை,ரொம்ப நல்லா இருந்துச்சு.என்னையே யாரும் போகவிடல,ரெண்டு நாளுல வந்துடுரன்னு சொல்லிட்டு வந்துருக்கன்,போறப்போ உன்னையும் கூட்டிகிட்டு போகலாம்னு தான் வந்தன் "

"ஓ,அப்படியா ரொம்ப சந்தோஷம் டா,இந்த வருஷம் எப்போதும் போல இல்லாம போயிடுமோன்னு நெனச்சன் நீ வந்துட்ட,ரொம்ப தேங்க்ஸ் டா..சரி சாப்டியா "

               "இன்னும் இல்லடா"

"சரி இரு நான் எடுத்துட்டு வறேன்,ரெண்டு பெரும் சேர்ந்து சாப்பிடலாம்"

                "ஓகே "

இப்படியே பேசிக்கிட்டு மணி போச்சு 11.50 ஆச்சு,நாங்களும் சொந்த கத சோக கதைன்னு ஊர்ல இருக்குற எல்லா கதையையும் பேசிட்டு இருந்தோம்.அப்போ கரண்ட் வேற இல்ல.

   "இருடா சுரேஷு நான் ச்சு..ச்சு போயிட்டு வரேன்,பயப்படாம இரு.நான் இருக்கண்டா  "

                          "டேய் ,அத நீ சொல்லுறியா-முதல்ல நீ பயப்படாம போ"

"சரி சரி விடு விடு"

                      "சீக்கிரமா வா நேரம் ஆக போகுது"

நானும் டாய்லெட் குள்ள வந்துட்டன்,அந்த நேரம் போன் அடிச்சுது..

  "என் பிரெண்ட போல யாரு மச்சான்............................."

"எவண்டா இந்த நேரத்துல,ஒரு வேல எனக்கு வாழ்த்து சொல்லவா இருக்குமோ,ஹலோ யாரு பேசுறது"

                 "ஹலோ,ரமேஷுன்களா "

"யா,நீங்க யாரு பேசுறது"

                  "நான் சுரேஷோட மாமா பேசுறன்,உங்க ப்ரெண்ட் சுரேஷ் ஒரு விபத்துல இறந்துட்டாரு ,இன்னைக்கு சாயங்காலம்,உங்ககிட்ட சொல்லிட சொன்னாங்க,நாளைக்கு தூக்குறோம் வந்துடுங்க"

"ஹலோ ஹலோ......பீப் பீப் "  போன் கட் ஆகிட்டு.

என் நெஞ்சு வேகமா துடிக்க ஆரம்பிச்சிட்டு
 "டப்டப்.....டப்டப்...............டப்டப்....டப்டப்" ,அந்த நேரத்துல காத்து வேற வேகமா அடிச்சு ஜன்னல்லாம் டபடபடப ...டபடபடப ..அப்படின்னு ஒரே சத்தம்...
திடீர்னு ஒரு சத்தம் யாரோ டாய்லெட் கதவ தட்டுறாங்க..டப் டப்..

                "டேய் ,ரமேஷ் இன்னும் என்னடா பண்ணுற,டைம் ஆகுது டா சீக்கிரம்        வாடா "

"நீநீ ........,போடா நான் வறேன்ன்ன்ன்ன்ன் "

               "ஏன்டா இழுக்குற,சரி சீக்கிரம் வா "

என்ன தான் பெஸ்ட் ப்ரெண்டாவே இருந்தாலும் பேய்னா பயமா தான இருக்கும்.என்னடா செய்றதுன்னு நெனச்சன்.இனி ஒன்னும் பண்ண முடியாது நம்மளையும் கூட்டிகிட்டு போகதான் வந்துருக்கான்,போக வேண்டியது தான்.அய்யயோ அம்மா வேற ஊர்ல இல்லியே நான் மட்டும் தனியா செத்துகிடக்கனுமே,நாய் வந்து கடிச்சு வச்சிட்டுனா என்ன செய்றது....
இது போல என்னென்னமோ எண்ணம் ஓடிகிட்டே இருக்குது.

நானும் தைரியத்த வரவச்சிக்கிட்டு பூஜ ரூமுக்கு போய் நல்ல விபூதி பட்டய போட்டுக்கிட்டு ஹாலுல போய் சுரேஷ் முன்னாடி உக்காந்துட்டன்.

          "என்னடா ரமேஷ்,பட்டயெல்லாம்,புதுசா இருக்கு.."

"அதுவா ,பட்டய பாத்தா பேய்க்கு பயம் வருமாம் அதான்"

          "ஆமாண்டா எனக்கும் பயமா தான் இருக்கு...ஹா ஹா.. , யாருடா உனக்கு  முன்னாடி போன் பண்ணுனது "

"அதுவா..என் மா...மா..மா"

          "அதுக்கு ஏன்டா இழுக்குற...சரி டைம் ஆக போகுது..5...4...3...2...1..MANY MORE HAPPY RETURNS OF THE DAY DA.வா கேக் வெட்டலாம்.."

"ஐயோ..என் நெலம இப்படி பேய் கூட பிறந்தநாள் கொண்டாட வேண்டியதா போச்சே,இவ்வளோ நேரம் பேசுனோம் கால் இருக்காணு பாக்கவே இல்லையே...சரி டா.....டா..டா "

               "ஏன்டா,ரமேஷ் ஒரு மாதிரியாவே இருக்க எதாச்சும் பேய  பாத்து பயந்துட்டியா "

"ஐயோ,பேயே இப்படி பேய பாத்து பயந்துட்டியான்னு கேக்குதே,இருந்தாலும் நம்ம நண்பனுக்கு நம்ம மேல எவ்வளோ பாசம் "

            "டேய்,,என்னடா யோசன,சொல்லுடா..என்னாச்சு"

"அதெல்லாம் ஒண்ணுமில்ல,வா வெட்டலாம்..."
மனசுக்குள்ள என்னோட கடைசி பிறந்தநாள் இப்படி ஆயிடுச்சேனு ஒரே பீலிங் ...
"என் ப்ரெண்ட போல யாரு மச்சான்............"
யாருடா இது,மறுபடியும் அதே நம்பர்.."ஹலோ..சொல்லுங்க "

"ஹலோ...தம்பி கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி போன் பண்ணுணன் ஞாபகம் இருக்குதா..மன்னிச்சிடுங்க தம்பி Wrong Number.தெரியாம மாத்தி உங்களுக்கு போட்டுட்டன் "

எனக்கு என்ன சொல்லுறதுன்னே தெரியல, அப்படியே சிரிக்க ஆரம்பிச்ச நான் 5 நிமிஷத்துக்கு சிரிச்சுகிட்டே இருந்தன்...

"டேய் ரமேசு... என்னடா ஆச்சு உனக்கு ,அய்யயோ லூசாகிட்டியா-அம்மாக்கு என்னடா நான் பதில்  சொல்லுறது"

"டேய் சுரேஷு ,கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒரு போன் வந்துச்சுல்ல அது என்னனு தெரியுமா"

"என்னடா?'

"நீ இன்னைக்கு சாயங்காலம் செத்து போயிட்டதா சொன்னாங்க,நான் நெனச்சன் -அய்யயோ நம்மல விட்டு பிரிய முடியாம நம்மளையும் கூட்டிகிட்டு போக வந்துட்டானே வீட்டுக்குன்னு ,உனக்கு பயந்துகிட்டு தான் நான் விபூதிலாம் பூசுணன்,ஆனா இப்போ மறுபடியும் போன் வந்துச்சுல்ல அதும் அவரு தான்,தம்பி தெரியாம மாத்தி போட்டுட்டன் அப்படின்னு சொல்லிடாரு -ஹா ஹா ஹா........."

"ஹாஹா ஹா ...........அட பாவிங்களா,எவன்டா இப்படிலாம் பண்ணுறது......"

நாங்க ரெண்டு பேரும் ஒருத்தன ஒருத்தன் பாத்து சிரிச்சிகிட்டே இருந்தோம்..மணி ராத்திரி 1 மணி....
திடீர்னு  ஒரு சத்தம்  கதவ தட்டுற சத்தம்...
                                     டக் டக் டக்....
"டேய் ரமேஷு போய் யாருன்னு பாரு.."

சுரேசுசுசுசுசுசுசுசுசுசுசு ....நீயும் வாடாடா....
                                      "டக் டக் டக்....."


ரமேசு....சுரேசு..... ரமேசு....சுரேசு..... Reviewed by Unknown on Thursday, July 04, 2013 Rating: 5

No comments:

Powered by Blogger.